'சில்லாக்கி டும்மா'.... சத்தியமா இது படத்தோட டைட்டில் தாங்க!
சென்னை: தமிழில் புதிதாக உருவாகி வரும் படத்துக்கு சில்லாக்கி டும்மா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாகவே படத் தலைப்புக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் வித்தியாசமான தலைப்பு வைத்தால் தான் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் நம்புகிறார்கள். இதனால் தலைப்புக்காக ரூம் போட்டு யோசிக்கிறார்கள்.
[அஜித்தின் தக்ஷா ட்ரோனுக்கு 2ம் இடம்... நூலிழையில் மிஸ்ஸானது முதல் பரிசு!]
அப்படி யோசித்ததன் பலனாக பல தமிழ் படங்கள் வித்தியாசமான தலைப்புகளுடன் வெளிவந்திருக்கின்றன. ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல, இவனுக்கு தண்ணியில கண்டம், என் காதலி செருப்ப காணோம், என் காதலி சீன் போட்றா, படித்தவுடன் கிழித்துவிடவும் என பல படங்கள் இதற்கு உதாரணம்.

இது அந்த மாதிரி படமோ
இந்த பட்டியலில் புதிதாக சேர்ந்திருக்கிறது ஒரு படம். அந்த படத்தின் பெயர் சில்லாக்கி டும்மா. இந்த டைட்டிலை படித்தவுடன் இது 'அது' மாதிரி படமோ என நினைக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்கிறார் இப்படத்தின் இயக்குனர் மாறன் கந்தசாமி.

கேங்ஸ்டர்களின் கதை
இதுகுறித்து அவர் கூறியதாவது, " இந்தப் படத்தில் நாயகனாக 'அட்டு' படத்தில் நடித்த ரிஷி ரித்திக் நடிக்கிறார் .இது மூன்று கேங்ஸ்டர்களுக்கிடையே ஒரு நாளில் நடக்கும் கதை .

அடல்ட்ஸ் ஒன்லி கிடையாது
படத்தின் தலைப்பை பார்த்து யாரும் அடல்ட்ஸ் படமாக நினைத்துவிடக்கூடாது அப்படி யாரும் தவறாக நினைத்து விடாதீர்கள். இது எல்லாருக்கும் பிடிக்கும்படியான கதையாக இருக்கும்." என்று அவர் கூறினார்.

துவக்க விழா
'சில்லாக்கி டும்மா' படத்தின் தொடக்க விழா ஏவிஎம் ஸ்டுடியோவில் சமீபத்தில் நடை பெற்றது . ரிஷிரித்விக்குக்கு ஜோடியாக மோனிகா நடிக்கிறார். யோகி பாபு, மைனா நந்தினி ,அபிஷேக் , சரவண சக்தி ,தீனா , ஜார்ஜ், பிஜிலி ரமேஷ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு உதயசங்கர். எடிட்டிங் - எலிசா .இயக்கம் மாறன் கந்தசாமி. இப்படத்தை டீக்கடை சினிமா க்ரவுட் பண்டிங் புரொடக்ஷன் மற்றும் அருவி பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கின்றன.


Click it and Unblock the Notifications











