twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜித்தின் தக்‌ஷா ட்ரோனுக்கு 2ம் இடம்... நூலிழையில் மிஸ்ஸானது முதல் பரிசு!

    அஜித்தின் தக்‌ஷா டீம் இரண்டாம் பரிசு பெற்றுள்ளது

    |

    குயீன்ஸ்லாண்ட்: அஜித் குழுவின் தக்‌ஷா ஆளில்லா விமானம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

    தற்போது விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்துவரும் அஜித், நடிகர் மட்டுமல்லாமல், கார் ரேசர், பைக் ரேசர், புகைப்படக் கலைஞர், ஹெலி டிசைனர், மெக்கானிக், என பல்வேறு திறமைகளை உள்ளடக்கியவர்.

    அவர் எம்.ஐ.டி மாணவர்களின் ஆளில்லா விமானம் உருவாக்குதலில் ஆலோசகராக முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

    சம்பளம்

    சம்பளம்

    மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி மாணவர்கள் மருத்துவ உதவிகளுக்கான ஆளில்லா விமானத்தை தயாரிக்கும் பணியில் இறங்கினர். தக்‌ஷா என்ற அந்த குழுவுக்கு ஆலோசகராக நடிகர் அஜித் நியமிக்கப்பட்டார். அஜித் ஆலோசகராக இருந்து எம்.ஐ.டி மாணவர்கள் உருவாக்கிய தக்‌ஷா ட்ரோன் அதிக நேரங்கள் பறந்து ஏற்கனவே சாதனை படைத்தது. இதில் ஆலோசகராக பணியாற்ற ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றார் அஜித்.

    குயீன்ஸ்லாண்ட்

    குயீன்ஸ்லாண்ட்

    இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாண்ட் மாகாணத்தில் உள்ள டால்பியில் கடந்த 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதிவரையில் மருத்துவ சேவைக்கு உதவும் ஆளில்லா விமானங்களுக்கான போட்டி நடத்தப்பட்டது.

    இறுதிப்போட்டி

    இறுதிப்போட்டி

    உலகெங்கிலுமிருந்து 55 ஆளில்லா விமானங்கள் இப்போட்டியில் பங்கேற்றன. அதிலிருந்து 11 விமானங்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. பங்கேற்ற 11 விமானங்களில் அஜித் ஆலோசகராக செயல்பட்ட தக்‌ஷா விமானம் இரண்டாம் இடம் பிடித்தது.

    கடும் போட்டி

    கடும் போட்டி

    ரத்த மாதிரியை ஒரு இடத்திலிருந்து எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் இலக்கை அடைய வேண்டும் என்பதுதான் போட்டி. அதில் தக்‌ஷா விமானத்திற்கும் ஆஸ்திரேலியாவின் மோனாஷ் யூஏஎஸ் என்ற விமானத்திற்கும் இடையே கடுமையான போட்டி இருந்தது.

    முதலிடம்

    முதலிடம்

    பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. அதில் அதிக தூரம் பறந்துசெல்லுதல், அவசரமாக தரைஇறங்குதல், விமான தயாரிப்புக் குழுவின் நேர்க்காணல் உள்ளிட்ட மூன்று அடிப்படையில் வெற்றியாளர்களை தேர்வு செய்துள்ளனர். விமானத்தின் பறக்கும் திறனைப் பொருத்தவரை தக்‌ஷா விமானம் 91 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், மோனாஹ் விமானம் 88.8 புள்ளிகளுடன் இரண்டாம் இடமும் பெற்றது.

    இரண்டாமிடம்

    இரண்டாமிடம்

    மற்ற இரண்டு தேர்வுகளில் தக்‌ஷா குழு சற்று குறைவான மதிப்பெண் எடுத்ததனால் 116.55 புள்ளிகளுடன் மோனாஹ் விமானம் முதலிடத்தையும், 115.70 புள்ளிகளுடன் தக்‌ஷா விமானம் இரண்டாம் இடத்தையும் பெற்றது. விஸ்வாசம் திரைப்பட படப்பிடிப்பில் பிசியாக இருப்பதனால் அஜித் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

    English summary
    Ajith Dhaksa team comes second rank in world UAV medical express Challenge 2018.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X