’என் அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க’ சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்!
பாடகி சின்மயி அவருடைய அம்மாவுக்கு போன் செய்யாதீர்கள் எனக் கோரியுள்ளார்
Recommended Video

சென்னை: ஊடகவியலாளர்களுக்கு பாடகி சின்மயி ஒரு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடெங்கிலும் மீ டூ மூவ்மெண்ட் வேகம் எடுத்துள்ளது. அதிகாரம் படைத்தவர்களால் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி மனதுக்குள் புழுங்கிய விஷயங்களை வெளிக்கொணர ஆரம்பித்துள்ளனர்.

பாலிவுட் சினிமாவில் பலரும் புகார் கூறிவரும் நிலையில், பின்னணி பாடகியான சின்மயி, தமிழ் சினிமா, கவிஞர், பாடகர், இசைக்கலைஞர் என பெரிய லிஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களில் விவாதங்கள் சூடுபிடித்துவரும் நிலையில், ஊடகவியலாளர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார். அவருடைய அம்மாவுக்கு போன் செய்து இதுபற்றி கேட்காதீர்கள் எனக் கேட்டுள்ளார்.
"சென்னையில் இருக்கும் அன்பான ஊடகவியலாளர்களே, என் அம்மாவுக்கு போன் செய்து அவருடைய நிலைப்பாட்டை கேட்பதை தயவு செய்து நிறுத்துங்கள். அவருக்கு 69 வயது ஆகிறது, அதிகப்படியான மன அழுத்தத்தை மட்டுமே அவர் பெற முடியும். தயவு செய்து நிறுத்துங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன். என் அம்மாவுக்கு போன் செய்யாதீர்கள்" என ட்வீட் செய்துள்ளார்.
[ஹோட்டல் அறையில் நடந்த கொடூரம்: நடிகை பரபரப்பு பேட்டி]
பண்பலைத் தொகுப்பாளர்கள் உள்பட சிலர் சின்மயியின் அம்மாவிடம் பேசினேன் என பதிவிட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. ஒரு சேனலிலிருந்து ஒருவர் என்ற விகிதத்தில் போன் செய்தால் கூட, அவருடைய தாயாருக்கு எவ்வளவு மன உளைச்சலைத் தரும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டுமென்றே இவ்வாறு அவர் ட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











