சம்பளம் வாங்காமல் நல்ல விஷயத்திற்கு குரல் கொடுத்த சிவகார்த்திகேயன்!
விழிப்புணர்வு குறும்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்
Recommended Video

சென்னை: குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விழிப்புணர்வு குறும்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் குழந்தைகளால் மிகவும் விரும்பப்படும் ஹீரோவாக உள்ளார். அவர் நடித்துள்ள சீமராஜா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.
ஐந்து நிமிடம் ஓடக்கூய இக்குறும்படத்தை உமேஷ் இயக்கியுள்ளார். ரிச்சர்டு எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். சாம் .சிஎஸ் இசையமைத்துள்ளார்.
நாற்பது குழந்தைகளுடன் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். குழந்தைகளுக்கு சரியான தொடுதல் மற்றும் தவறான தொடுதல் பற்றி அவர்களுக்கு புரியும் வகையில் சொல்லியிருக்கிறார் சிவா. விரைவில், சமூக வலைதளங்களிலும், திரையரங்குகளிலும் இக்குறும்படம் ரிலீசாக இருக்கிறது.
[ கமலின் மற்றொரு சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறதா? ]
தனியார் தொண்டு நிறுவனம் முன்னெடுத்த இந்த முயற்சிக்கு மிக மகிழ்ச்சியோடு முன்வந்து செய்துகொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். தனக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது என்பதனால் ஒரு தகப்பனாக இதை செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது எனக் கூறி சம்பளம் வாங்காமல் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.


Click it and Unblock the Notifications











