'ஹுஹூ'... வெளியானது 2.0 ஸ்னீக் பீக்.... பிரமாண்டத்தின் பிரமாண்டம்!
2.0 படத்தின் ஸ்னீக் பீக் காட்சி இன்று காலை 11 மணிக்கு வெளியானது.
சென்னை: ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தின் ஸ்னீக் பீக் காட்சி இன்று காலை 11 மணிக்கு வெளியானது.
ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார்.

இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2.0 படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. டீசரை பார்த்த பலரும், ஷங்கரை சிலாகித்து பேசினர்.
[முதல்வர் ஹெலிகாப்டரில் போகும்போது தரையில் விழுந்து வணங்குவது காமெடியாக இருக்கு: விஜய் ]
ரஜினியின் சிட்டி ரோபாவும், அக்ஷய் குமாரின் பறவை ரோபோவும் மோதிக்கொள்ளும் காட்சிகள் ரசிகர்களை புல்லரிக்க வைத்தன. டீசரின் கடைசியில் ரஜினி (சிட்டி ரோபோ) 'ஹுஹூ' என கொடுக்கும் சவுண்ட் செம டிரெண்டிங் ஆனது.
இந்நிலையில் இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை இன்று காலை 11 மணிக்கு இயக்குனர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 2.0 படம் எப்படி உருவானது என்பது பற்றி இந்த ஸ்னீக் பீக் சொல்கிறது.
இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றியும், தொழில்நுட்பங்கள் பற்றியும் இந்த ஸ்னீக் பீக்கில் காட்சியில் காட்டப்பட்டுள்ளது.
இயக்குனர் ஷங்கர் என்றாலே பிரமாண்டம் தான். அதிலும் சுமார் 550 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகியிருக்கும் 2.0 படத்தின் பிரமாண்டத்தை இந்த ஸ்னீக் பீக் காட்சிகள் எடுத்து சொல்கின்றன.
விடுமுறை தினமான இன்று ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அமைந்திருக்கிறது 2.0 ஸ்னீக் பீக் காட்சிகள்.


Click it and Unblock the Notifications











