Don't Miss!
- News
அடிக்கடி குலுங்கும் டெல்லி! நிலநடுக்கம் திடீரென அதிகரிக்க என்ன காரணம்! தமிழ்நாட்டின் உண்மை நிலை என்ன
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. நியூசி,-ன் அதிவேக பவுலரை அசால்ட் செய்த சுப்மன் கில்.. வாயடைத்துப்போன ரோகித்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 வரை இந்த 4 ராசிக்கு பிரச்சனை மேல பிரச்சனை வரும்... கவனமா இருங்க..
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Finance
என் இதயமே கனத்து விட்டது.. 8 மாத கர்ப்பிணி பெண் கூகுள் பணி நீக்கம் குறித்து கலக்கம்.. !
- Automobiles
குறைவான விலையில் மைலேஜை வாரி வழங்கும் பைக்! பழைய நண்பன் ஹீரோவின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போட்ட ஹோண்டா!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
முதல்வர் ஹெலிகாப்டரில் போகும்போது தரையில் விழுந்து வணங்குவது காமெடியாக இருக்கு: விஜய்
சென்னை: முதல்வர் ஹெலிகாப்டரில் செல்லும்போது கட்சியினர் தரையில் விழுந்து வணங்குவது காமெடியாக உள்ளது என்று நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படம் மூலம் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா நோட்டா படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். நோட்டா படம் வரும் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் அவர் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

நண்பர்கள்
என் முதல் படமான பெல்லி சூப்புலு படத்திற்கே தமிழகத்தில் அமோக ஆதரவு கிடைத்தது. அந்த படம் இங்குள்ள சில தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியுள்ளது. என் தெலுங்கு நண்பர்கள் பலர் தமிழகத்தில் படிக்கிறார்கள், வேலை செய்கிறார்கள். அவர்கள் அர்ஜுன் ரெட்டி படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை, ஏதாவது செய்து ஏற்பாடு செய்யுங்கள் என்று எனக்கு போன் செய்தார்கள்.

தமிழக மக்கள்
அர்ஜுன் ரெட்டி படத்தை நான் தமிழகத்தில் ப்ரொமோட் செய்யவில்லை. தமிழக மக்கள் என் மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பது வியப்பாக உள்ளது. நோட்டா படம் அரசியலமைப்பை பற்றியது. படத்தில் கற்பனையாக ஒரு காட்சி வைக்கப்பட்டது. அந்த காட்சியை நாங்கள் படமாக்கியபோது சென்னையில் நிஜமாகவே அதே போன்ற ஒரு நிகழ்வு நடந்தது.

அதிர்ச்சி
படத்தில் கற்பனையாக வைத்தது எப்படி நிஜத்தில் நடக்கிறது என்று எனக்கு வியப்பாக இருந்தது. அந்த சம்பவத்தை நினைத்து 2, 3 நாட்கள் அதிர்ந்து போனேன். நான் ஹைதராபாத் சென்ற பிறகு சென்னையில் நடந்த சம்பவம் பற்றி என் நண்பர்களிடம் கூறியபோது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு சாதாரண ஆள் அரசியலில் தள்ளப்படுகிறான். அது தான் என் கதாபாத்திரம். அதனால் தமிழர்களே தமிழர்களே என்று இருக்க வேண்டியது இல்லை.

காமெடி
உங்கள் மாநில முதல்வர் ஹெலிகாப்டரில் செல்லும்போது கட்சியினர் தரையில் படுத்து வணங்கியதை பார்த்து சிரிப்பாக இருந்தது. ஹெலிகாப்டரில் செல்பவருக்கு அவர்கள் தரையில் விழுந்து கும்பிடுவதை பார்க்க முடியாது. நோட்டா படத்தில் நாசர் சார் பெரிய அரசியல்வாதியாக நடித்துள்ளார். படத்தில் அவர் கட்சியினர் அனைவரும் சட்டைப் பையில் அவரின் புகைப்படத்தை வைத்திருப்பார்கள். அதை பார்த்து எனக்கு வியப்பாக இருந்தது.

அரசியல்வாதிகள்
தமிழகத்தில் அரசியல் கட்சியினர் டிரான்ஸ்பரன்ட்டாக சட்டை அணிந்து பையில் கட்சி தலைவரின் புகைப்படத்தை வைத்திருப்பார்கள் என்று பின்னர் என்னிடம் கூறினார்கள். கட்சியினர் அனைவரும் நாசரை பார்த்தவுடன் குனிந்து கும்பிடு போடுவார்கள். அதை பார்க்கும் அவர் நிமிர்ந்து என் முகத்தை பாருங்கள். இல்லை என்றால் எனக்கு சிலை செய்தால் என் முகம் எப்படி இருக்கும் என்று தெரியாமல் வேறு யார் முகத்தையாவது வைத்துவிடுவீர்கள் என்பார்.

ரஜினி
நான் பொதுவாக குறைந்த அளவிலான படங்கள் பார்த்துள்ளேன். நான் என் வாழ்நாளில் பெரும் பகுதியை போர்டிங் ஸ்கூலில் கழித்துள்ளேன். அங்கு மாதத்திற்கு ஒரு படம் தான் திரையிடுவார்கள். 2 மாத விடுமுறையில் வீட்டுக்கு வந்தால் ரஜினிகாந்த் படங்களை பார்ப்பேன். ஏனென்றால் அவரின் படங்கள் தெலுங்கில் டப் செய்து வெளியிடப்படுகின்றன. அருணாசலம், தளபதி படங்களை பார்த்துள்ளேன். நான் பெரியவானான பிறகு ஹைதராபாத் வந்தபோது தனுஷ், கார்த்தி, சூர்யா ஆகியோரின் படங்களை பார்த்துள்ளேன். விக்ரம் சாரின் அந்நியன் படத்தை தெலுங்கில் பார்த்திருக்கிறேன்.

தனுஷ்
மாரி படத்தில் தனுஷ் பேசும் செஞ்சிருவேன் வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல கதையுடன் வரும் எந்த இயக்குனரின் படத்திலும் நடிப்பேன். நான் நோட்டா படத்தை சென்னையில் உள்ள தியேட்டரில் அதுவும் அதிகாலை காட்சியை பார்க்க விரும்புகிறேன். நான் இந்த படத்தை பார்க்க மரண வெயிட்டிங். தவறுகள் செய்திருந்தால் அந்த அரசியல்வாதிகளுக்கு இந்த படத்தை பார்த்தால் உறுத்தும் என்றார் விஜய்