அஜித்துக்கு கிஸ் கொடுக்க ஆசையா இருக்கு ! - ஸ்ரீரெட்டி ஓபன் ஸ்டேட்மென்ட்

சென்னை : ஸ்ரீ ரெட்டி பத்தி தெரியாதவங்க இருப்பாங்களா என்ன? அந்த சர்ச்சை குயின் சமீபத்தில் ப்ரொவோலின் பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீரெட்டி மிகவும் ஹாட்டான ஒரு உடையில் தனது உடை வடிவமைப்பாளர் ரேணுவின் அட்டகாசமான உடை வடிவைப்புகளை பற்றி புகழ்ந்தார்.

தொகுப்பாளினி, செய்தி வாசிப்பாளர், நடிகை , மாடல் என பல பரிமாணங்களில் ரசிகர்களை தன் வசம் இழுத்தவர். தமிழ் நாட்டில் ரேணு நிகழ்ச்சி மூலம் தன்னுடைய மாடலிங் பணியை தொடங்கியுள்ளார். இதற்காக தமிழ் மக்கள் தன்னை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். விரைவில் உடை வடிவமைப்பாளர் ரேணுவுடன் பிகினி ஷூட் ஒன்று நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காக தானே பல இளவட்டங்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களின் ஆசையை இந்த போட்டோ ஷூட் மூலம் பூர்த்தியடையும்.

Srireddy wishes to kiss Ajith kumar

தென்னிந்தியா சினிமா பற்றி பேசுகையில் கன்னட திரையுலம் பற்றி எதுவும் குறை விரும்பவில்லை. அப்படி ஏதாவது கூறினாலும் நிச்சயம் அது நெகட்டிவாக தான் இருக்கும் என்று கூறினார் சர்ச்சை குயின். ஆனால் தமிழ் திரையுலகத்தில் இருப்பவர்கள் மிகவும் அருமையானவர்கள். என்னுடைய வீட்டின் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூட மிகவும் நல்லவர்கள் என்றார்.

சென்னையில் இது என்னுடைய இரண்டாவது வாழ்கை. நான் சென்னையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். சில மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீ ரெட்டி ராகவா லாரன்ஸ் மீது பாலியல் தொந்தரவு கொடுத்தாக குற்றம் சாட்டிவந்தார். அதை மறுத்த ராகவா லாரன்ஸ் ஸ்ரீ ரெட்டிக்கு தன்னுடைய அடுத்த படத்தில் ஒரு வாய்ப்பு கொடுப்பதாக உறுதி அளித்தார். அந்த வகையில் ஸ்ரீ ரெட்டி நேர்காணலின் போது கூறுகையில் தற்போது ராகவா லாரன்ஸ் மாஸ்டர் உடன் இணைந்து நடிக்கவுள்ளேன் என்பது உறுதியான ஒரு தகவல். இன்னும் அதிகம் வேண்டும் என்றால் நான் அதற்காக காத்துகொண்டு இருக்கிறேன்.


எனக்கு உப்மா படங்களில் நடிக்க விருப்பமில்லை. ஏற்கனவே என் வாழ்க்கையில் நான் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளேன். இனிமேலாவது நல்ல படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஹீரோயின் கதாபாத்திரத்தில் மட்டும் தான் நான் நடிப்பேன் என்று இல்லை. போலீஸ், வில்லி என எந்த ஒரு முக்கியமான கதாபாத்திரமாக இருந்தாலும் நான் நடிக்க தயார். ஏனென்றால் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நான் பட்ட கஷ்டம் , சந்தித்த பிரச்சனைகள் அதிகம். அதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளேன். அதிகமான சிரமங்களை அனுபவித்து இருக்கிறேன். இனிமேலாவது நிம்மதியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார்.

எக்கா.. தயவு செஞ்சு இந்த போட்டோவ நீயே ஒரு தடவை நல்லா பாரு.. நல்லாவா இருக்கு?
திரையுலகில் நீங்கள் மனதார ஒருவருக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது யார்? என்று ஒரு கேள்வியை கேட்டவுடன் ஸ்ரீ ரெட்டி சற்றும் யோசிக்காமல் எந்த ஒரு காமமும் இல்லாமல் ஒரு அன்பின் வெளிப்பாடாக நான் முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுவது நடிகர் அஜித் குமார் அவர்களுக்கு தான். இதற்கு காரணம் அவரின் "நேர்கொண்ட பார்வை" திரைப்படம். அந்த படம் அவ்வளவு அற்புதமான திரைப்படம். அதில் வந்த முன்று பெண்களின் நிலை அனைத்தையும் நான் அனுபவித்துள்ளேன். என்னுடைய வாழ்க்கையே படமாக்கியது போல் இருந்தது அந்த திரைப்படம். சண்டை காட்சிகள், அவரது எக்ஸ்பிரெஸ்ஷன் இவை அனைத்தும் ஒரு லெஜெண்ட் என்பதை நிரூபிக்கிறது. என்னை கேட்டல் லெஜெண்ட் விருது அவருக்கு தான் வழங்குவேன். அவரின் கால்களில் விழுந்து வணங்குவேன். இன்று மட்டும் அல்ல நான் என்றுமே அஜித் சாரின் மிக பெரிய ரசிகை.

தமிழ் மக்கள் மிகவும் சென்டிமெண்டானவர்கள். என்னுடைய பிரச்சனைகளை அவர்கள் புரிந்து கொண்டனர். சென்னைக்கு வந்த பிறகு எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறார்கள். ஒரு நாள் கூட நான் இங்கு வந்துவிட்டேன் என்று கலங்கியது இல்லை. எனக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது என்பதற்காக மட்டும் நான் இதை கூறவில்லை. உண்மையிலேயே மனதார எனக்கு தமிழ் மக்களை மிகவும் பிடித்துள்ளது என்றார்.

ஸ்ரீரெட்டிக்கு தமிழ் சினிமாவில் பல வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதை தவிர அவர் மாடலிங் துறையிலும் பிஸியாக இருக்கிறார். நல்ல கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கிறார். இயக்குனர்களின் கவனத்திற்கு ...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X