சர்ச்சையை ஓரங்கட்டு.. ரீ என்ட்ரி கொடுத்த பாடகி சுசித்ரா..காரணம் அந்த இசையமைப்பாளர்
சென்னை: தமிழ் சினிமாவில் ஃபேமஸான பின்னணி பாடகிகளில் ஒருவராக இருந்தவர் சுசித்ரா. ஏராளமான ஹிட் பாடல்களை பாடிய அவர்; சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டார். ஆனால் அதை செய்தது தான் இல்லை தனுஷ்தான் பின்நாட்களில் கூறினார். இடையே கொஞ்சம் சைலெண்ட்டான அவர்; கொடுத்த பேட்டிகளில் பல சரவெடிகளை பற்ற வைத்தார். இந்நிலயில் மீண்டும் அவர் மேடையேறி பாடல் பாடியிருக்கிறார்.
ஆர்ஜே, பத்திரிகையாளர், பின்னணி பாடகி என பல முகங்களை கொண்டிருந்தவர் சுசித்ரா. ஆய்த எழுத்து படத்தில் முக்கியமான ரோலை ஏற்று நடிகையாகவும் ஜொலித்தார். அவரது கரியர் நன்றாக போய்க்கொண்டிருந்தபோது; சுச்சி லீக்ஸ் விவகாரம் வெடித்தது. சில நாட்கள் இடைவெளியில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் ஒவ்வொன்றாக ட்விட்டரில் வந்துகொண்டே இருந்தன. அது அந்த சமயத்தில் கோலிவுட்டில் மிகப்பெரிய பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தின.

சுசித்ராவுக்கு பிரச்னையா?: அந்த சமயத்தில் நடிகரும், ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக்கை திருமணம் செய்திருந்தார். இந்த சுச்சி லீக்ஸ் பிரச்னை பெரிய பரபரப்பை ஏற்படுத்தியபோது, 'தனது மனைவி சுசித்ராவுக்கு மனநிலைமை சரியில்லை. அதனால்தான் இப்படி நடந்துவிட்டது' என தெரிவித்திருந்தார் கார்த்திக். தொடர்ந்து கார்த்திக்கை விவாகரத்து செய்த சுசி; இன்னொருவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.
சுசித்ரா பேட்டி என்றாலே சர்ச்சைதான்: இரண்டாவது திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் அமைதியாக இருந்த அவர்; யூடியூப் சேனல்களுக்கு பேட்டிகள் கொடுக்க தொடங்கினார். அவரது பேட்டி என்றாலே கண்டிப்பாக ஏதோ ஒரு சர்ச்சை வெடிக்கும் என்ற நிலைதான் இருக்கிறது. குறிப்பாக தனுஷ், திரிஷா உள்ளிட்டோர் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார் சுசி. ஆனால் சம்பந்தப்பட்டவர்களோ அதற்கு எந்த எதிர்வினையையும் ஆற்றுவதில்லை. சிலர் மட்டுமே அவர் மீது புகார் கொடுத்து வழக்கு பதிந்திருக்கிறார்கள்.
விஜய் விஷயத்தில்: அதிலும் விஜய் - சங்கீதா விவாகரத்து விஷயத்தில் தொடர்ந்து பேட்டிகள் கொடுத்த அவர்; திரிஷாவை உண்டு இல்லை என்று செய்துவிட்டார். விஜய்யை திரிஷா காதலிக்கவில்லை என்றும்; அவர் உதயநிதியைத்தான் காதலித்தார் என்றெல்லாம் கொளுத்திப்போட்டார். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க; சுசித்ரா என்றால் சர்ச்சையை கிளப்புபவர் மட்டுமில்லை; மிகச்சிறந்த பாடகி; எனவே அவர் மீண்டும் பாடல்கள் பாட வர வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தார்கள்.
செய்து காட்டிய விஜய் ஆண்டனி: இந்நிலையில் சுசித்ரா மீண்டும் மேடையேறி பாடல் பாடியிருக்கிறார். அதாவது விஜய் ஆண்டனி நேற்று ஒரு இசை கச்சேரி நடத்தினார். அதில் சுசித்ராவும் பங்கேற்று, விஜய் ஆண்டனி இசையமைத்து வேலாயுதம் படத்தில் இடம்பெற்ற 'மாயம் செய்தாயோ' பாடலை பாடினார். நீண்ட காலம் கழித்து சுசித்ராவை மேடையில் பார்க்கும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. இனிமேல் அவர் தொடர்ந்து பாட வேண்டும். இதை சாத்தியப்படுத்திய விஜய் ஆண்டனிக்கு பாராட்டுக்கள் என ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
