மொட்டை தலைக்கு தில்ல பார்த்தியா.. ரேகா நடிக்கிறாங்க.. மேக்கப் போட்டு அடக்கிடுறாங்க.. #Day7 #Promo2
சென்னை: பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியின் 7ம் நாளின் 2வது புரமோ தற்போது வெளியாகி உள்ளது.
என்னடா வார இறுதியில் மொட்டை தல சுரேஷ் இவ்ளோ சைலன்ட்டா இருக்காரே என எண்ணும் போது, இந்த புரமோவில் தல புகுந்து விளையாடி இருக்கார்.
நடிகை ரேகாவுக்கு புரோக்கன் ஹார்ட் கொடுத்த சுரேஷ் சக்கரவர்த்தி, அவங்க மேக்கப் போட்டு தன் நிஜத்தை மறைப்பதாக வெளிப்படையாக கூறியுள்ளார்.
மாஸ்டரின் மாஸ் போஸ்டரில் பிரபல நடன இயக்குனர்.. அந்த பிக் பாஸ்ல அடுத்த லெவல் போயிட்டாங்களே!

ஊதி பெருசாக்கக் கூடாது
சனம் ஷெட்டி பணியாற்றிய மாடலிங் கம்பெனியை டுபாக்கூர் என பாலாஜி முருகதாஸ் எகத்தாளமாக சொல்லி சண்டையை பெருசாக்கி விட்டு, இப்போ சனம் ஷெட்டிக்கு எதையும் ஊதி பெருசாக்கக் கூடாது என புரோக்கன் ஹார்ட் குத்துவதை புரமோவில் பார்த்த ரசிகர்கள், வாய்க்கு வந்தபடியெல்லாம் பாலாஜியை திட்டி வருகின்றனர்.

உனக்கு நல்லா வேணும்
மேலும், சனம் ஷெட்டியை பிடிக்காத பிக் பாஸ் தர்ஷன் ரசிகர்கள், வந்த உடனே பாலாஜி முருகதாஸை பாகுபலின்னு கூப்பிட்டல்ல உனக்கு நல்லா வேணும் என சனம் ஷெட்டியையும் கண்டபடி கலாய்த்துத் தள்ளி வருகின்றனர். சனம் ஷெட்டியும் லேசு பட்ட ஆள் கிடையாது என்பதை ரசிகர்கள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர்.

சீன் போடும் அனிதா
புரோக்கன் ஹார்ட் மொட்டை தலை சுரேஷுக்கு குத்தி விட்டு, சாரி சார் கோச்சிக்காதீங்க, இனிமே நமக்குள்ள பிரச்சனை வேண்டாம் என செம சீன் போட்டு அழும் அனிதாவை பார்த்தும் ரசிகர்கள், இருக்கு, மறுபடியும் அனிதாவுக்கும், சுரேஷுக்கும் ஒரு சூப்பர் சண்டை என வழக்கம் போல எதிர்பார்த்து ஏமாந்து போக போகின்றனர்.

நமத்து போய் இருக்கு
பிக் பாஸ் நிகழ்ச்சியின் தீவிர விசிறியான மொட்டை தலை சுரேஷ், வந்ததுல இருந்து இந்த சீசன் மழையில நனைஞ்ச பட்டாசா இருக்குன்னு, செம தில்லோட பிக் பாஸ் வீட்டுக்குள்ளேயே பிக் பாஸை ட்ரோல் செய்து கெத்துக் காட்டி வருகிறார். ரொம்ப நமத்து போய் இருக்கு, கொஞ்சம் காய வச்சிட்டு வரேன்னு, சனம் கையை பார்த்து புரோக்கன் ஹார்ட்டை குத்தி பிரச்சனையை ஆரம்பித்துள்ளார்.

மேக்கப் போட்டே மறைக்கிறாங்க
மாஸ்க் போட்டுகிட்டு வீட்டில் சிலர் இருக்காங்கன்னு கமல் ஆரம்பத்தில் சொன்னது போல, நடிகை ரேகா இன்னும் தனது நிஜ நீலாம்பரி ரூபத்தை காட்டாமல் இருக்கிறார் என சுரேஷ் சக்கரவர்த்தி ஓப்பனாகவே போட்டு உடைத்து விட்டார். மேக்கப் போட்டு, மேக்கப் போட்டு, அவங்க தங்களை அடக்கிக்கிறாங்க என்று சொல்லி 2வது புரமோவில் ஹீரோவாவே ஆகிட்டார் மொட்டை பாஸ்.


Click it and Unblock the Notifications











