மனோஜ் பாரதிராஜா மரணம் LIVE: மகனை பறிகொடுத்த பாரதிராஜா.. அப்பாவுக்கு இறுதிச்சடங்கு செய்த மகள்கள்
சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் புனித் ராஜ்குமார், சிரஞ்சீவி சர்ஜா உள்ளிட்டவர்கள் 40 பிளஸ் வயதில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்து வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
83 வயதாகும் பாரதிராஜா தனது 48 வயது மகன் மனோஜ் உயிரிழந்ததை அறிந்து மீள முடியாத சோகத்தில் உள்ளார். தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

1976ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி பாரதிராஜா மற்றும் சந்திரலீலாவதி தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் மனோஜ். அவருக்கு ஜனனி எனும் தங்கை உள்ளார். கடந்த 2006ம் ஆண்டு நந்தனா என்பவரை திருமணம் செய்துக்கொண்ட மனோஜுக்கு மதிவதனி மற்றும் ஆர்த்திகா என இரு மகள்கள் உள்ளனர்.
மனோஜ் உடல் தகனம் செய்யப்பட்டது
அம்மா, மனைவி, மகள்கள் மயானத்தில்

பாரதிராஜாவை கை தாங்கலாக அழைத்து வந்தனர்

மயானத்திற்கு வந்த வைரமுத்து
மனோஜ் அம்மாவுக்கு விஜய் ஆறுதல்
நான் என்ன பண்ணேன்? வருந்திய மனோஜ்
மூக்குக் கண்ணாடி அணிந்தபடி
ரஜினிகாந்த் இரங்கல் தெரிவிக்கவில்லையே

இறுதி ஊர்வலம் தொடங்கியது



Click it and Unblock the Notifications












