மனைவி விவகாரத்தில் தொடர்ந்து மிரட்டல்.. போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மீது தாடி பாலாஜி மீண்டும் புகார்!

By

சென்னை: தொடர்ந்து தனக்கு மிரட்டல் விடுக்கும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, நடிகர் தாடி பாலாஜி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

Recommended Video

KPY Yogi Marriage Video • Lock Down Love

வாலி, சச்சின், மொழி, மாப்பிள்ளை உள்பட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருப்பவர் பாலாஜி.

சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவருகிறார். ஏற்கனவே ஒரு பாலாஜி இருந்ததால், தாடி பாலாஜி என்று பெயரை மாற்றி வைத்துக்கொண்டார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இன்னும் பிரபலமான தாடி பாலாஜி, மாதவரத்தில் வசித்து வருகிறார். முதல் மனைவியை விவாகரத்து செய்த பின், 2009 ஆம் ஆண்டு நடனக் கலைஞர் நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு, போஷிகா என்ற மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக, நித்யாவும் பாலாஜியும் பிரிந்தனர். மகள் போஷிகா, தாயுடன் உள்ளார்.

சாதி பெயர் சொல்லி

சாதி பெயர் சொல்லி

இந்நிலையில், மாதவரம் காவல் நிலையத்தில் நித்யா புகார் அளித்திருந்தார். அதில் பாலாஜி, தன்னை சாதி பெயரை சொல்லி திட்டுவதாகவும் போதையில் அடித்து சித்ரவதை செய்ததாகவும் கூறியிருந்தார். இதையடுத்து பாலாஜி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் என் மனைவிக்கும், வேறு ஒரு நபருக்கும் தகாத உறவு உள்ளது.

சீரழித்து விட்டார்

சீரழித்து விட்டார்

ஆயிரம் விளக்கு போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த உதவி ஆய்வாளர் மனோஜ்குமாரிடம் உதவிக்காகச் சென்றேன். அவர் உதவி செய்வது போல நடித்து என் குடும்பத்தை சீரழித்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்தப் பிரச்னை 2017 ஆம் ஆண்டு முதல் போலீஸ் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், மனோஜ்குமார், தாடி பாலாஜி ஆகியோரிடம், கடந்த 13 ஆம் தேதி கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் அதிவீர பாண்டியன் விசாரித்தார்.

மறைமுக மிரட்டல்

மறைமுக மிரட்டல்

அப்போது, மனோஜ்குமார், பாலாஜியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தாடி பாலாஜி நேற்று புகார் கொடுத்துள்ளார். அதில், துணை கமிஷனர் விசாரித்தபோது மனோஜ்குமார் மிரட்டினார். மறைமுக மிரட்டலும் விடுத்து வருகிறார். தொடர்ந்து மிரட்டி வரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ பதிவை கொடுத்துள்ளதாகவும் தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X