மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தாடி பாலாஜியின் மனைவி நித்யா.. காவல்நிலையம் வரை வந்த பஞ்சாயத்து!

சென்னை : பாலாஜியின் மனைவி நித்யா, கடன் விவகாரத்தில், இளைஞருடன் அடிதடியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காமெடி நடிகராக தாடி பாலாஜி வடிவேலுவுடன் பல படங்களில் துணை காமெடி நடிகராக நடித்துள்ளார்.

thadi balaji wife nithya fighting with young man

இதையடுத்து, விஜய் டிவியில் கலக்க போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சி நடுவராக இருந்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் : நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவுக்கும் தாடி பாலாஜிக்கும் இடைய கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும், போதைக்கு அடிமையான தாடி பாலாஜி, தன்னையும் மகளையும் குடித்துவிட்டு மோசமாக நடத்துகிறார் என நித்யா குற்றம் சாட்டி இருந்தார். இதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் : ஆரம்பத்தில் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்தனர். பின் நாட்கள் செல்ல செல்ல இருவரும் குழந்தைக்காக சேர்ந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் எலியும் பூனையுமாக மாறினர். இதையடுத்து, இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

கடன் விவகாரத்தில் தகராறு : இந்நிலையில், தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம், கலைச்செல்வன் என்பவர் ரூ.94 ஆயிரம் கடனாக வாங்கிவிட்டு, 52 ஆயிரத்தை மட்டுமே திருப்பி கொடுத்துள்ளார். எஞ்சிய பணத்தை கொடுக்காததால், நிதியாவுக்கும் கலைச்செல்வனுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

காவல்நிலையத்தில் புகார் : இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடன் தொகையை வாங்க கலைச்செல்வனின் வீட்டுக்கு நித்யா சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறி இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதில் காயம் அடைந்த நித்யா கொளத்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ள புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X