The Odessy Day 1 Prediction: உலகமே எதிர்பார்த்த தி ஓடிஸி.. நோலனின் கெரியரிலேயே இல்லாத வசூலா அமையுமா?

சென்னை: உலக சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் என்றால் அது கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள 'தி ஒடிஸி' தான். 'ஓபன்ஹைமர்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வெளியாகும் நோலனின் அடுத்த படம் என்பதால், உலகம் முழுவதும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. அதற்கேற்றாற்போல், முதல் நாள் வசூல் குறித்த பேச்சுக்களும் அதிகரித்துள்ளது.

வட அமெரிக்காவில் மட்டும் சுமார் 3,900 திரையரங்குகளில் வெளியாகும் 'தி ஒடிஸி', முதல் வார இறுதியில் 90 முதல் 100 மில்லியன் டாலர் வரை வசூலிக்கும் என்று பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த கணிப்பு உண்மையாகும் பட்சத்தில், 2012-ல் வெளியான 'தி டார்க் நைட் ரைசஸ்' படத்திற்குப் பிறகு, கிறிஸ்டோபர் நோலனின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஓப்பனிங் பெற்ற திரைப்படமாக 'தி ஒடிஸி' மாறும்.

Also Read
The Odyssey: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் குறைந்த டிக்கெட் கட்டணம்.. ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
The Odyssey: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் குறைந்த டிக்கெட் கட்டணம்.. ரசிகர்களுக்கு குட் நியூஸ்!

கடந்த ஆண்டு வெளியான 'ஓபன்ஹைமர்' ஒரு ஒரு பயோபி படமாக இருந்தபோதும், முதல் வாரத்திலேயே 82 மில்லியன் டாலர் வசூலித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. பின்னர் உலகம் முழுவதும் 975 மில்லியன் டாலருக்கும் மேல் வசூலித்து, ஆஸ்கர் விருதுகளையும் குவித்தது. அந்த வெற்றிக்குப் பிறகு வெளியாகும் படம் என்பதால், 'தி ஒடிஸி' மீது ரசிகர்களின் நம்பிக்கை இன்னும் அதிகரித்துள்ளது.

The Odyssey Day 1 Box Office Prediction Will Christopher Nolan s Epic Deliver His Biggest Opening Ever

இந்த வாரத்தில் பெரிய அளவில் வெளியாகும் முக்கிய திரைப்படம் 'தி ஒடிஸி' மட்டுமே என்பதால், பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தை எளிதாகப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்கள் திரையரங்குகளில் ஓடி வசூல் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காகவே யுனிவர்சல் நிறுவனம் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்துள்ளது. நோலனும் தனது முந்தைய படத்திற்கு இல்லாத வகையில் இந்த படத்திற்கான இந்தியாவுக்கு வந்து புரோமோஷன் செய்துவிட்டுச் சென்றுள்ளார்.

சுமார் 250 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்காக, விளம்பரத்திற்கே மேலும் 125 மில்லியன் டாலர் வரை செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டன், பாரிஸ், மும்பை உள்ளிட்ட உலகின் முக்கிய நகரங்களில் பிரம்மாண்ட புரமோஷன் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

The Odyssey Day 1 Box Office Prediction Will Christopher Nolan s Epic Deliver His Biggest Opening Ever

ஐமேக்ஸில் சம்பவம்: இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், முழுக்க முழுக்க IMAX கேமராக்களிலேயே படமாக்கப்பட்ட முதல் முழுநீள திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. பெரிய திரையில் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதில் எப்போதும் கவனம் செலுத்தும் நோலன், இந்த முறையும் அதையே நிரூபித்திருக்கிறார். அதனால் உலகம் முழுவதும் உள்ள IMAX திரையரங்குகள் தொடர்ந்து பல வாரங்களுக்கு 'தி ஒடிஸி' படத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அடுத்த ஒரு மாதத்திற்கு மேலாக ஐமேக்ஸ் திரைகளில் ரிலீஸ் செய்யும் அளவுக்கு எந்த படமும் இல்லததால் தி ஓடிஸி ஐமேக்ஸ் ஸ்கீரின்களில் நின்று விளையாடவுள்ளது.

Recommended For You
The Odyssey: தி ஓடிஸிக்கு சர்வதேச அளவில் சிக்கல்.. அடேங்கப்பா இந்த அளவுக்கு தோண்டி எடுத்து அடிக்கிறாங்க?
The Odyssey: தி ஓடிஸிக்கு சர்வதேச அளவில் சிக்கல்.. அடேங்கப்பா இந்த அளவுக்கு தோண்டி எடுத்து அடிக்கிறாங்க?

நடிகர்கள்: ஹோமரின் புகழ்பெற்ற கிரேக்க காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில், மாட் டாமன் ஒடிஸியஸாக நடித்துள்ளார். அதேபோல் டாம் ஹாலண்ட், ஆனி ஹாத்வே, ஜெண்டயா, ராபர்ட் பாட்டின்சன், லுபிடா நியாங்கோ, சார்லிஸ் தெரான், ஜான் பெர்ந்தல் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

எதிர்பார்ப்பு: 'ஓபன்ஹைமர்' மூலம் உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த கிறிஸ்டோபர் நோலன், 'தி ஒடிஸி' மூலம் மீண்டும் பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றை மாற்றுவாரா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. ஆனால் உலகம் முழுவதும் உள்ள எதிர்பார்ப்பிற்கு படம் முதல் நாளே அசால்ட்டாக ரூபாய் 1000 கோடியை அசால்ட்டாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X