ஜெயிக்கணும்னா... வில்லத்தன சுதீப்புக்கு வெறித்தென வசனம் எழுதிய ஹீரோ!

By

மும்பை: வில்லனாக நடிக்கும் சுதீப்புக்கு பிரபல ஹீரோ எழுதிய வசனம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா நடித்து இந்தியில் ஹிட்டான படம், தபாங். 2010 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை அடுத்து, அடுத்த பாகம் உருவானது. 2012 ஆம் ஆண்டு வெளியான இந்த படமும் ஹிட்டானதை அடுத்து இப்போது 3 வது பாகம் உருவாகியுள்ளது.

This dialogue of Sudeep from Dabangg 3 has been written by Salman Khan himself!
இதில் சல்மான் கான் சல்புல் பாண்டே கேரக்டரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கிறார். சோனாக்‌ஷி சின்ஹா மீண்டும் ஹீரோயினாக நடிக்கிறார். பிரபுதேவா இயக்குகிறார். அவர் ஏற்கனவே வான்டட் படத்தில், சல்மான் கானை இயக்கியிருந்தார். வரும் 20 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது.

ஹிப்ஹாப் ஆதியின்.. நான் சிரித்தால்.. இணைகிறார் ஐஸ்வர்யா மேனன்
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஓபனிங் பாடல் காட்சி சமீபத்தில் சர்ச்சையானது. அந்தப் பாடலில் சாமியார்கள் மேற்கத்திய நடனம் ஆடுவது போன்ற காட்சிக்கு இந்து ஜன்ஜக்ருதி சமிதி என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.இந்தப் படத்தில், பல்லி சிங் என்ற கேரக்டரில் வில்லனாக கன்னட ஹீரோ சுதீப் நடிக்கிறார். இவர் தமிழில், நான் ஈ, புலி, முடிஞ்சா இவனப்புடி படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் படத்தின் வசனம் ஒன்று இடம்பெற்றிருக்கிறது. அதைக் குறிப்பிட்டுள்ள சுதீப், தபாங் 3 படத்தில் எனக்குப் பிடித்த வசனம் இது. இதை எழுதியது, நடிகர் சல்மான் கான்தான் என்று குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

அந்த வெறித்தன வசனம் இதுதான்:

-நன்மைக்கும் தீமைக்குமான சண்டையில நன்மைக்குத்தான் வெற்றி கிடைக்கும்னு நீங்க கேள்விபட்டிருப்பீங்க. ஆனா, அது தப்பு. தீமைக்குத்தான் வெற்றிக் கிடைக்கும். ஏன்னா, ஜெயிக்கிறதுக்குத் தேவையான கெட்ட விஷயம் நல்லவன்கிட்ட இருக்காது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X