கடுமையான படப்பிடிப்பு.. கிடைத்த இடைவேளை.. ஹேப்பியாக கழித்த விஷால்!
சென்னை : துப்பறிவாளன் படம் விஷால் படங்களில் மிக முக்கியமானது. படத்தை அப்படி ஒரு த்ரில்லராக எடுத்து இருப்பார் மிஷ்கின். மிஷ்கினின் படங்கள் எப்போதும் பிரம்மிக்க வைக்கும் த்ரில்லராக தான் இருக்கும். அதையே துப்பறிவாளன் படத்தில் மிகசிறப்பாய் செய்து இருப்பார் .
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இயக்குனர் மிஷ்கின் முடிவெடுத்து தற்போது படப்பிடிப்பை லண்டனில் நடத்தி வருகிறார். முதல் பாகத்தை போலவே இந்த படத்தையும் நடிகர் விஷாலே தயாரித்து வருகிறார் .

படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாய் சென்றதை அடுத்து படக்குழுவினருக்கு சின்ன விடுப்பு விடப்பட்டுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் நடிகர்கள் ஊர் சுற்றி பார்ட்டி செய்து இருக்கின்றனர். அப்போது எடுத்த புகைப்படத்தை நடிகர் விஷால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். அவர் பதிவேற்றியுள்ள புகைப்படத்தில் விஷால், பிரசன்னா, நந்தா, முன்னா மற்றும் ரமணா ஆகியோர்
இருந்தனர்.
விஷாலுடன் பிரசன்னா துப்பறிவாளன் படத்திலே நடித்து இருந்தார். தற்போது விஷாலின் நண்பர்களும் படத்தில் இணைந்து இருப்பது நல்ல விசயம் தான் .இவர்கள் அனைவரும் நல்ல வாய்ப்பிற்காக பல ஆண்டுகளாக சினிமாத்துறையில் கடினமாக உழைத்து கொண்டு இருப்பவர்கள்.
ஹாட் தமன்னாவுக்கு ஹேப்பி பர்த்டே.. காஜல் அகர்வால், சமந்தா என பிரபலங்கள் வாழ்த்து!
முக்கியமாக நந்தா மற்றும் ரமணா. ரமணா கடைசியாக கைதி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். ,அதற்கு முன் சிம்பா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். நந்தா கடைசியாக ழகரம் படத்தில் நடித்து இருந்தார் விமர்சனம் நன்றாக இந்த படத்திற்கு கிடைத்து இருந்தாலும் படம் மக்களிடம் சென்று சேரவில்லை .
பல திறமையானவர்களும் படத்தில் இணைந்து இருப்பது நல்ல விசயம் ,முக்கியமாக மிஷ்கின் எப்பேற்பட்டவர்களையும் நடிக்க வைத்து விடும் ஒரு கலைஞர் அவருக்கு நல்ல நடிகர்கள் கிடைத்தால் நமது எதிர்பார்ப்புக்கு மேல் கொடுப்பார் .அதனாலே துப்பறிவாளன்2 படம் மிக பெரிய அளவில் எதிர்பார்க்கபடுகிறது .


Click it and Unblock the Notifications











