முதலை பார்க்கணும்... ஊர் சுத்திப் பார்க்கணும்.. கொஞ்சும் மைனா சலினா
Recommended Video
சென்னை: அமெரிக்க நடிகை சலினா குஸ்மானோவுக்கு சென்னை சாப்பாடும், நம்ம ஊர் கோவில்களும் ரொம்பப் பிடிக்குமாம்.
அமெரிக்க நடிகையும் மாடலுமான சலினா குஸ்மானோ தனது முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். தனது இந்திய அமெரிக்க திரைப்படமான டெவில்ஸ் நைட்: டான் ஆஃப் தி நைன் ரூஜ் திரைப்படத்தின் இசை வெளியீட்டில் கலந்து கொள்ள சென்னை வந்துள்ளார்.
இப்படத்தில் நம்ம ஊர் நடிகர் நெப்போலியன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது நாம் ஏற்கனவே அறிந்ததே. இப்படத்தில் செலினா நர்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதுக்கு இவ்ளோ எமோஷனல் தேவையில்லையே லாஸ்லியா.. சீனியர் நடிகை அட்வைஸ்!

வீடியோ
மேலும் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட மியூசிக் வீடியோவில் ஒரு போலீஸாக தோன்றுகிறார். விஷயம் அதுவல்ல. இசை வெளியீட்டு விழாவிற்காக வந்த அம்மணிக்கு நம்ம ஊர் மிகவும் பிடித்து விட்டதாம்.

மைனாக்களே
டெக்சாஸில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ‘ கொஞ்சும் மைனாக்களே' தமிழ் பாடலு நடனமாடியது மிகவும் பிடித்தது எனக் கூறும் அவர், இந்திய உணவை ருசித்ததாகவும், இந்திய மக்களுடன் உரையாடியது , அழகான அனுபவம் என்றும் கூறுகிறார்.

முதலை பார்க்கணும்
சில நாட்களுக்கு முன்புதான் சென்னையில் தரையிறங்கிய சலினா, நகரத்தை இன்னும் சுற்றி பார்க்கவில்லையாம். விரைவில் சென்னைக்கு வெளியே சென்று சென்னை உணவை உண்ண வேண்டும், பாம்பு பூங்கா, முதலை பண்ணை, மகாபலிபுரம் போன்ற இடங்களைப் பார்த்து ரசிக்க வேண்டும்" என்று அவர் பட்டியலிடுகிறார்.

கோவிலுக்குப் போகணும்
கோயில்களுக்கு செல்வது மிகவும் பிடித்தமான ஒரு விஷயம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நான் பாலியில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்றேன், எனவே இந்திய கோயில்கள் எவ்வளவு வித்தியாசமாக இருக்கின்றன அவற்றை பார்க்க ஆர்வமாக உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
நல்லாப் பாருங்க.. சந்தோஷமா சுத்திப் பாருங்க.


Click it and Unblock the Notifications











