'டேய்.. என்னடா பண்ற‘.... முத்தம் கொடுத்த தனுஷை கண்டித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

வட சென்னை படத்தின் மாடில நிக்குற மான்குட்டி பாடல் புரொமோ வெளியாகியுள்ளது

சென்னை: வட சென்னை திரைப்பட பாடலின் புரொமோ படத்தின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் வட சென்னை. மூன்றாவது முறையாக வெற்றி-தனுஷின் வெற்றிக்கூட்டணி என்பதால் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. அக்டோபர் 17 வரை காத்திருக்க முடியாது என ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.

நீங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் பத்தாது, இன்னும் நீங்க மிரண்டுபோகனும்னு நாங்க எதிர்பார்க்கிறோம் என்று சொல்வதுபோல இருக்கிறது அவர்கள் வெளியிட்டுள்ள பாடல் புரொமோ.

[அவளுக்கு கிடைப்பது எனக்கும் வேணும்: சக நடிகையை பார்த்து பிரபல நடிகை பொறாமை]

கானா பாலா

கானா பாலா

மாடியில நிக்குற மான்குட்டி என்ற கானா பாலாவின் வரிகளும் குரலும் வட சென்னையின் ஆத்மார்த்தமான கான உணர்வைத் தரும் வகையில் அமைந்திருக்கிறது. கானா பாலாவுக்கு இந்த ஆண்டுக்கான பெஸ்ட் பாடலாக அது நிச்சயம் இருக்கும். அதுபோல் கானாவை கானாவின் உலகத்திற்குள்ளேயே சென்று ரசிக்கும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். அதனால்தான் அதனுடைய ஒரிஜினாலிட்டி பிசகாமல் இப்படத்தின் கானா பாடல்கள் சிறப்பாக இருக்கின்றன.

அன்பு

அன்பு

அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள தனுஷ், ஒரு வட சென்னை இளைஞராகவே வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு இந்த நாற்பது நொடிகள் ஓடக்கூடிய பாடல் புரமோவே போதுமானதாக இருக்கிறது. மிக ஒழுக்கமான இளைஞராக பக்தி பரவசத்துடன் ஐஸ்வர்யாவை ஃபாலோவ் பண்ணும் காட்சி கண்ணுல ஒத்திக்கலாம். அவ்ளோ அழகாக இருக்கிறது.

பத்மா

பத்மா

சமீப காலங்களில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒவ்வொரு படங்களிலும் கதாபாத்திரத்தின் உயிர்ப்புக்காக அவர் மெனக்கெடுகிறார். சிந்தாதரிப்பேட்டை, தண்டையார்பேட்டை தெருக்களில் ஒரு ரவுண்ட் விட்டு வந்தால் காணக்கிடைக்கும் அழகிய சென்னைப் பெண்களின் உடல்மொழிகளை வெளிப்படுத்துகிறார். நிச்சயம் ஐஸ்வர்யாவுக்கு இது சிறந்த படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

தனுஷ்-ஐஸ்வர்யா

ரொமான்ஸுக்கு இலக்கணம் இதுதான் எனச் சொல்லுமளவுக்கு அவர்களின் நடிப்பு அழகாக பொருந்திப்போகிறது. தனுஷ் மாடியிலிருந்து பைனாகுலரில் ஐஸ்வர்யாவைப் பார்ப்பது, சட்டென கிஸ் அடிக்கும்போது.. ஐஸ்வர்யா டேய்.. என்னடா பன்ற என கண்டிப்பது. லவ்வர கிஸ்ஸடிக்காம வேற யார் கிஸ்ஸடிக்கிறது என்றதும், நாம லவ்வர்ஸுன்னு யார்ரா சொன்னது...? என எண்ட் கார்டு போடுவது என அவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருப்பது தெரிகிறது.

கெமிஸ்ட்ரி

கெமிஸ்ட்ரி

நெரிசல் மிகுந்த பகுதியான வடசென்னையை காட்சிப்படுத்தும் அழகியல் வெற்றிமாறனுக்கு கைவந்த கலையாகிவிட்டது. இரவு நேரத்தில் தெருவிளக்கின் ஒளிக்கு கீழே பெண்கள் ஒய்யார நடைபோடுவது போன்ற காட்சி கண்ணைப் பறிக்கிறது. இவ்வளவு நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றால் ஒளிப்பதிவாளர் வேல்ராஜுக்கும் வெற்றிமாறனுக்குமான கெமிஸ்ட்ரி எப்படிப்பட்டது என்பது ஆச்சர்யம். ஒரு படத்தின் ஒரு ஃப்ரேமைப் பார்த்தாலே அது நல்ல படமா இல்லையா என என்னால் சொல்லமுடியும் என்றவர் ஜெர்மனியின் புகழ்பெற்ற இயக்குனர் ஃபெலினி. ஃபெலினி தற்போது உயிருடன் இருந்து இந்த டீசரைப் பார்த்திருந்தால் நிச்சயம் வடசென்னையை சிறந்த படம் என்று சொல்லியிருப்பார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X