சண்டக்கோழி 2-ஐ அடுத்து சர்காரிலும் கீர்த்தியை ஓரங்கட்டிய வரலட்சுமி: மாஸ் நடிப்பு
சென்னை: சண்டக்கோழி 2 படத்தை போன்றே சர்காரிலும் கீர்த்தி சுரேஷை ஓவர்டேக் செய்துவிட்டார் வரலட்சுமி சரத்குமார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக வரலட்சுமியின் நடிப்பை தான் அனைவரும் பாராட்டுகிறார்கள்.
அந்த கதாபாத்திரத்திற்கு வரலட்சுமியை தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்கிறார்கள் ரசிகர்கள்.
[சர்கார் கதை பிரச்சனை: வருண் ராஜேந்திரனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய முருகதாஸ்]
கீர்த்தி
சர்கார் படத்தில் கீர்த்தி சுரேஷ் இருந்தாலும் வரலட்சுமியின் நடிப்பு தான் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்துள்ளது. படத்தை பார்ப்பவர்கள் வரலட்சுமியை சமூக வலைதளங்களில் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நடிப்பு
முன்னதாக சண்டக்கோழி 2 படம் வெளியானபோதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் வரலட்சுமி. வருமா வில்லி கதாபாத்திரத்தில் அசத்திட்டீங்கம்மா என்றார்கள் ரசிகர்கள். தொடர்ந்து இரண்டாவது முறையாக தனது நடிப்பால் கீர்த்தி சுரேஷை ஓவர்டேக் செய்துவிட்டார் வரலட்சுமி சரத்குமார்.
பாராட்டு
என்ன நடிப்பு, என்ன நடிப்பு. வாழ்த்துக்கள் வரலட்சுமி
விஜய்
அவன் கார்பரேட் கிரிமினில்... நான் கருவிலேயே கிரிமினல். சிறப்பான நடிப்பு


Click it and Unblock the Notifications











