ஒளிப்பதிவாளர் செழியன் மரணம்.. திரைத்துறையில் பேரதிர்ச்சி.. தொடர்ந்து இழப்பா நடக்குதே

சென்னை: கோலிவுட்டின் முக்கியமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் செழியன். கல்லூரி, ரெட்டைச்சுழி, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் அவர்; டூலெட் என்ற திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்நிலையில் உடல்நல குறைவால் இன்று அவர் உயிரிழந்திருப்பது அனைவரையும் உச்சக்கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியிஉர்க்கிறது.

சிவகங்கையை சேர்ந்தவர் செழியன். மறைந்த இயக்குநர் மகேதிரன் படித்த அழகப்பா பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்துவிட்டு; சினிவாவில் ஒளிப்பதிவாளராகும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது தீவிரமான முயற்சி காரணமாக கல்லூரி திரைப்படத்தில் கேமரா மேன் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. அதில் தன்னுடைய மிகச்சிறந்த வேலையை காண்பித்த அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்தன.

Veteran Cinematographer and To Let Director Chezhiyan Passes Away
Photo Credit:

பாலாவின் பரதேசி: அந்தவகையில் இயக்குநர் சிகரமும், இயக்குநர் இமயமும் சேர்ந்து நடித்த ரெட்டைச்சுழி திரைப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அதையடுத்து பரதேசி, தாரை தப்பட்டை, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் வேலை செய்தார். குறிப்பாக, பரதேசி திரைப்படத்தின் வெற்றிக்கு செழியனின் ஒளிப்பதிவும் முக்கியமான காரணம் என்று இயக்குநர் பாலாவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read
அருள்நிதியின் அப்பா, அம்மாவுக்கு பீமரத சாந்தி விழா.. பெற்றோருக்கு முகத்தில் மகிழ்ச்சியை பாருங்க
அருள்நிதியின் அப்பா, அம்மாவுக்கு பீமரத சாந்தி விழா.. பெற்றோருக்கு முகத்தில் மகிழ்ச்சியை பாருங்க

இயக்குநர் செழியன்: இதற்கிடையே சினிமாவுக்கு மட்டுமின்றி ஆவண படங்களுக்கும் கேமரா ஒர்க் செய்தார். மறைந்த குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம், எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோரின் டாக்குமெண்ட்டரி படங்களுக்கு சூப்பரான ஒளிப்பதிவை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டூலெட் என்ற திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார். அது வணிக ரீதியாக தோல்வியடைந்தாலும், விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது.

செழியனின் பள்ளி: சினிமாவில் இயக்கம், ஒளிப்பதிவு தாண்டி இன்னொரு ஆரோக்கியமான விஷயத்தையும் அவர் செய்திருக்கிறார். அதாவது, அவர் தனியாக ஒரு திரைப்பட பள்ளியையும் வைத்திருக்கிறார். அதில் படித்த 34 மாணவர்களை சில மாதங்களுக்கு முன்புதான் சுயாதீன திரைப்பட இயக்குநர்களாக அறிமுகம் செய்து வைத்து பாராட்டை பெற்றார்.

உயிரிழந்த செழியன்: இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் செழியன் இன்று காலை உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கான காரணங்கள் இனிமேல் தெரியவரும் என தெரிகிறது. அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக; நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் வைக்கப்படவிருக்கிறது. அவரது உயிரிழப்பு சினிமா துறையினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X