கதை கேட்ட பிரபல நடிகர்.. காத்திருக்க சொன்ன வெற்றிமாறன்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: தனக்கு ஒரு கதைக் கேட்ட பிரபல நடிகரை இயக்குநர் வெற்றிமாறன் காத்திருக்குமாறு கூறியது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளன.
Recommended Video
சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் விரைவில் கைதி 2 படத்தை எதிர்பார்க்கலாம் என தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு கூறிய தகவலை கூறியுள்ளார்.

இதேபோல் ஆர்ஆர்ஆர் படத்தின் சண்டைக் காட்சியை பார்த்து ராஜமவுலியின் அப்பா கண்கலங்கியது குறித்த தகவலையும் கூறியுள்ளார். மேலும் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கிறாரா சிம்பு!
இதேபோல் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாம் நடிக்கவுள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் தனக்காக கதை தயார் செய்யுமாறு கூறிய சிம்புவிடம் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருப்பதால் காத்திருக்குமாறு வெற்றிமாறன் கூறியது குறித்தும் தெரிவித்துள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











