குடும்பத்தை எல்லாம் வெளியே அனுப்பிட்டு.. விஜய் பற்றி அம்மா ஷோபா ஓபன் டாக்.. அப்படிப்பட்டவரா தளபதி?
சென்னை: முதலமைச்சரும், நடிகருமான விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் அவரது ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் கோலாகல கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். மேலும் சோஷியல் மீடியா முழுக்க விஜய் பற்றிய பதிவுகளாகவே பார்க்க முடிகிறது. இந்நிலையில் விஜய்யின் தாய் ஷோபா தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டி ட்ரெண்டாகியிருக்கிறது.
முதலமைச்சர் விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகிறார்கள். திமுகவை சேர்ந்தவர்களும், ஒரு நடிகராக விஜய்க்கு தங்களுடைய வாழ்த்தை தெரிவிக்கிறோம்; அவரை நடிகராக எங்களுக்கு ரொம்பவே பிடிக்கும் என்று போஸ்ட்டுகள் போடுவதை பார்க்க முடிகிறது. அதுவும் ஒருவகையில் உண்மைதான். விஜய்யை முதலமைச்சராக வெறுக்கும் பலரும் உள்ளுக்குள் அவரை ஒரு நடிகராக ரகசியமாக ரசிக்கவே செய்வார்கள். அந்த அளவுக்கு அவர் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

கோலாகல கொண்டாட்டம்: விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம் களைகட்டியிருக்கிறது. அவர் முதலமைச்சரான பிறகு வரும் முதல் பிறந்தநாள் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள், அவரை பற்றிய கவியரங்கங்கள், வாழ்த்தரங்கங்கள் எல்லாம் நடைபெறுகின்றன. நேற்றுகூட சென்னையில், 'வாகை தலைவனுக்கு வாழ்த்துகள்' என்ற பெயரில் நிகழ்ச்சி நடந்தது. அதில் இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
சின்ன வருத்தம்: அதேசமயம் விஜய்யின் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தமும் அடைந்திருக்கிறார்கள். அதாவது, விஜய் அண்ணா மட்டும் சங்கீதா அண்ணியோடு சேர்ந்து இந்த பிறந்தநாளை கொண்டாடியிருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும்; அதை மட்டும் கொஞ்சம் சீக்கிரம் சரி செய்துவிடுங்கள் அண்ணா என்று கோரிக்கைகளும் ஆங்காங்கே எழுந்திருக்கின்றன. அவர் என்ன முடிவெடுத்திருக்கிறாரோ; அவருக்கே தெரியும். இந்நிலையில் விஜய்யின் தாய் ஷோபா தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
ஷோபா பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "விஜய்க்கு தனிமைதான் பிடிக்கும். அவரை வெளிநாட்டில் விட்டால்கூட குடும்பத்தை ஷாப்பிங்கிற்கு அனுப்பிவிட்டு இவர் ரூமில் தனியாகத்தான் இருப்பார். வெளியே போவது, ஷாப்பிங் போவதெல்லாம் அவருக்கு பிடிக்காது. மாறு வேடத்தில் அவர் போனாலும் கண்டுபிடித்துவிடுவார்கள். இவரோ ரொம்பவே சைலெண்ட்டாக வந்துவிடுவார்" என்றார். அவரது இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள், தளபதி தனிமை விரும்பி என்று தெரியும்; வெளிநாட்டில் போயும் அப்படித்தானா என ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.
சங்கீதா விவகாரம்: முன்னதாக, விஜய் மீது சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரண்டு பேரும் ஆன்லைனில் ஆஜராக கோரிக்கை வைத்தார்கள். அதற்கு தேவையான மின்னஞ்சல், ஆவணங்கள் அனைத்தையும் சரியாக சமர்ப்பிக்க வேண்டும் என சொல்லி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினம் அவர்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து கிடைக்குமா? இல்லை தங்கள் முடிவை மாற்றி சேர்ந்து வாழ்வோம் என சொல்லவிருக்கிறார்களா என்ற கேள்வியும் பலரிடம் எழுந்திருக்கிறது. ஏனெனில் சில நாட்களுக்கு முன்பு வெளியான ஒரு தகவலில், 'விஜய்யும், சங்கீதாவும் சமாதானமாக போய்விட முடிவெடுத்திருக்கிறார்கள்' என குறிப்பிடப்பட்டிருந்தது.


Click it and Unblock the Notifications
