குதிரை பேர பஞ்சாயத்தை விடுங்க.. விஜய்க்கும், குதிரைக்கும் இருக்கும் தொடர்பு தெரியுமா?.. கணித்த லெஜண்ட்

சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். அவருக்கு பெரும்பான்மை இல்லாததால் தேர்தலுக்கு முன்பு திமுகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்தார். அதனைத் தொடர்ந்து அதிமுகவிலிருந்து சில எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு; தவெகவின் ஐக்கியமானார்கள். இதன் காரணமாக விஜய் தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடத்துகிறார் என விமர்சனங்கள் வலுத்தன. இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி கூறியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

நடிகராக இருந்த விஜய்; ஒரு பிரளயத்தையே செய்துவிட்டு முதலமைச்சராகியிருக்கிறார். மொத்தம் அவரது கட்சி 108 தொகுகள் வென்று தத்தளித்தது. அப்போது திமுக கூட்டணியில் இருந்த விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்தார். தனக்கு தக்க நேரத்தில் கை கொடுத்ததால் இடதுசாரிகள் தவிர்த்து மற்ற கட்சியினருக்கு அமைசரவையில் இடமும் கொடுத்தார். அது பெரிய வரவேற்பை தமிழ்நாட்டில் பெற்றது.

Vijay Has a Horse-Like Face Balu Mahendra s Remark Shared by Seenu Ramasamy Goes Viral
Photo Credit:

மெல்ல கரையும் அதிமுக: தவெகவின் வெற்றியை பெரும்பாலானோர் எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. ஏன் பெரும்பாலான தவெகவினரே இப்படி ஒரு வெற்றி கிடைக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை. மேலும் அவருக்கு இருக்கும் க்ரேஸை பார்த்து இனிமேல் 20 வருடங்களுக்கு அவர்தான் முதலமைச்சர் என்றும் ஒருதரப்பினர் ஆணித்தரமாக சொல்கிறார்கள். மறுபக்கம், தமிழ்நாட்டின் அரசியல் முகங்களில் ஒன்றாக இருக்கும் அதிமுகவும் கொஞ்சம் கொஞ்சமாக கரைகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

Also Read
மகள் வயது இருக்கும்.. அந்த நடிகையோடு ரொமான்ஸ் செய்கிறாரா அஜித்?.. இது என்ன புதுசு?
மகள் வயது இருக்கும்.. அந்த நடிகையோடு ரொமான்ஸ் செய்கிறாரா அஜித்?.. இது என்ன புதுசு?

ஐக்கியமாகும் எம்.எல்.ஏக்கள்: இதன் காரணமாக அதிமுகவில் இருந்த சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார்கள். இடைத்தேர்தல் வரும் அதில் நின்று தங்களுக்கு இருக்கும் செல்வாக்கோடு; விஜய்யின் செல்வாக்கையும் சேர்த்து வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள். ஆனால், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போன்று; இடைத் தேர்தல்களுக்கு தடை விதித்தது நீதிமன்றம்.

குதிரை பேர அரசா?: மற்ற கட்சி எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவதை எதிர்க்கட்சியினர் கடுமையாக எதிர்த்துவருகிறார்கள். ஆட்சியமைப்பதற்கு சோஃபாவை கொடுத்து புஷ்பா மாடலை தொடங்கி வைத்த விஜய்; இப்போது கட்சியை பலப்படுத்த குதிரை பேரத்தில் எம்.எல்.ஏக்களை வாங்கிவருகிறார் என்று எதிர்க்கட்சியினர் சரமாரியாக தாக்கிவருகின்றன. விஜய்யோ, இது குதிரை பேர அரசு இல்லை; குதிரை வேகத்தில் செயல்படும் அரசு என்று சட்டப்பேரவையில் சொன்னார். மேலும், மக்கள் மத்தியிலும் இந்த குதிரை பேர விவகாரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே அரசியல் விமர்சகர்களும் கருதுகிறார்கள்.

விஜய்க்கும், குதிரைக்கும் இருக்கும் தொடர்பு: இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி கூறியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர், "ஒருநாள் பாலுமகேந்திரா சாருடன் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தேன். விஜய் வீட்டை தாண்டி சென்றோம். அப்போது பயங்கரமான கூட்டத்தை பார்த்து, 'இந்தப் பையனுக்கு ஏன் இவ்வளவு கிரேஸ் என கேட்டார். பிறகு அவரே, 'அந்தப் பையனுக்கு புலி, சிங்கம் என பூனை குடும்பத்தின் முகம். அதுமாதிரி குதிரை குடும்பத்து முகமும் இருக்கிறது. இந்த முக வெட்டு இருப்பவர்கள்தான் உலக அளவில் வென்றிருக்கிறார்கள். இவர்களை குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும்' என கூறியதாக நினைவுகூர்ந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X