விஜயின் அடுத்த படத்தையும் இயக்குகிறாரா.. லோகேஷ் கனகராஜ்?

சென்னை: 'தளபதி 64' படத்தை தொடர்ந்து, விஜயும், லோகேஷ் கனகராஜும், மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஷிமோகாவில் படப்பிடிப்புக்கான அடுத்த அட்டவணையைத் தொடங்க படக்குழு தயாராகிவிட்ட நிலையில், சமீபத்திய சலசலப்பு என்னவென்றால், விஜயும், லோகேஷ் கனகராஜும், விரைவில் மற்றொரு படத்திற்காக இணைவார்களா என்பதுதான்.

Lokesh Kanagaraj may direct Vijay again

சமீபத்தில் ஒரு நேர்காணலில், லோகேஷ் கனகராஜின் முதல் படமான 'மாநகரம்' படத்தில் பணியாற்றிய நடிகர் முனிஷ்காந்த், 'தளபதி 64' படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்காக அவரை அணுகியதாகக் கூறியிருந்தார், ஆனால் அவருக்கு பொருத்தமான பாத்திரம் இல்லை என்பதால் தன்னை அழைக்கவில்லை என கூறியிருந்தார்.

அதே நேர்காணலில் தான், லோகேஷ் மீண்டும் விஜய்யுடன் இணைந்து பணியாற்றக்கூடும் என்பதை அவர் வெளிப்படுத்தினார். நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜின் படைப்புகளில் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும், அவருடன் மீண்டும் பணியாற்றுவதை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அது 'தளபதி 65' ஆக இருக்குமா என்பது இன்னும் தெரியவில்லை.

அடுத்த படத்தில் மற்றொரு இயக்குனருடன் பணிபுரிந்த பிறகு, லோகேஷுடன் விஜய் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அட்லீ, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் இதுவரை விஜயுடன் 3 முறை இணைந்துள்ளனர். இதே போன்று பரதன், தரணி ஆகியோர் 2 முறை இணைந்துள்ளனர்.

இந்தப் பக்கம் இளையராஜா... அந்தப்பக்கம் நான்... எல்லாம் தன்னால அமைஞ்சது... உருகும் விஜய் ஆண்டனி
இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் விஜயை சந்தித்து ஒரு கதையை விவரித்ததாகவும், இப்படம் தளபதி 65 ஆக மாற அதிக வாய்ப்பு உள்ளது என்றும் செய்திகள் வந்துள்ளன. எனவே அதன் பிறகு அவர் லோகேஷுடன் 'தளபதி 66' படத்திற்காக பணியாற்றக்கூடும்.

இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'தலபதி 64' படத்தில் மாளவிகா மேனன் ஹீரோயினாகவும், விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், ஸ்ரீமான், சஞ்சீவ், ஸ்ரீநாத், ரம்யா சுப்பிரமணியன் என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. 2020 கோடையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X