மருதநாயகம்...விஜய், ரஜினியுடன் படம்...கமல் சொன்ன சுவாரஸ்ய தகவல்

சென்னை : மருதநாயகம் படம் வருமா, விஜய் மற்றும் ரஜினியுடன் இணைந்து நடிப்பீர்களா என்பது போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்ய பதில்களை வழங்கி உள்ளார் கமல்ஹாசன். அதோடு விக்ரம் படம் பற்றிய பலருக்கும் தெரியாத பல விஷயங்களை ஓப்பனாக பகிர்ந்து கொண்டுள்ளார்.

Recommended Video

விஜய், கமல் சூட்டிங் ஸ்பாட்ல எப்படி நடந்துக்கொள்வார்? Lokesh Kanagaraj Pressmeet | Kamal | Vikram

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் விக்ரம் படத்தின் வசூல் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் 200 கோடிகளை தாண்டி விக்ரம் படத்தின் வசூல் சென்று கொண்டிருக்கிறது.

விக்ரம் பட வெற்றியை கொண்டாடும் விதமாக டைரக்டருக்கு கார், அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கு பைக், சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் என வரிசையாக பரிசளித்துள்ளார் கமல். இதைத் தொடர்ந்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்தனர் கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ்.

விஜய், கமல் சூட்டிங் ஸ்பாட்ல எப்படி நடந்துக்கொள்வார்?.. உண்மையை பளீச்சென்று சொன்ன லோகேஷ் கனகராஜ்!

இது தான் நன்றி சொல்ல ஒரே வழி

இது தான் நன்றி சொல்ல ஒரே வழி

கமல் கூறுகையில், நன்றியைத் தவிர சொல்வதற்கு வார்த்தை எதுவும் இல்லை. சந்தோஷத்தை கடந்து, வெற்றி பயத்தை கொடுத்து இருக்கிறது. வெற்றி கிடைத்தது போதும் என்று எண்ணவில்லை. இன்னும் வெற்றிக்காக உழைப்போம். அடுத்து ஒரு நல்ல படத்தை தருவது தான் உங்களுக்கு சொல்வதற்கான உண்மையாக நன்றியாக இருக்கும் என்றார் கமல்.

நான் டயலாக்கே இல்லாமல் நடிப்பேன்

நான் டயலாக்கே இல்லாமல் நடிப்பேன்

விக்ரம் படத்தில் ஃபர்ஸ்ட் ஆஃபில் டயலாக்கே இல்லாமல் இருந்ததற்கு கமல் சாரை எப்படி கன்வின்ஸ் செய்தீர்கள் என்ற கேள்வி லோகேஷ் கனகராஜிடம் கேட்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட கமல், அதற்கு நான் பதில் சொல்லி விடுகிறேன். நான் டயலாக்கே இல்லாமல் கூட நடித்திருக்கிறேன். அதனால் என்னை கன்வின்ஸ் செய்வது அவருக்கு ஒன்றும் கடினமான வேலை கிடையாது என்றார். இது முயற்சி என்று வரவேற்று, ஓகே சொல்லி விட்டேன்.

 மருதநாயகம் வருமா சார்

மருதநாயகம் வருமா சார்

மர்மயோகி, சபாஷ் நாயுடு, மருதநாயகம் படங்கள் வருமா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கமல், அமெல்லாம் பழசு. புதிதாக கொடுக்க விரும்புகிறேன். மருதநாயகம் படத்தில் இதுவரை 35 நிமிட காட்சிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. முன்பு எடுத்த எந்த ஒரு காட்சிகளையும் வீணாக்காமல் இப்போதும் எங்களால் ஷுட்டிங்கை தொடர முடியும். மருதநாயகம் படத்தின் ஷுட்டிங் எந்த நேரத்திலும் துவங்கப்படலாம் என்றார்.

கேஜிஎஃப் 2 வெற்றி பற்றி கமல்

கேஜிஎஃப் 2 வெற்றி பற்றி கமல்

ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 போன்ற படங்களின் வெற்றி குறித்து கேட்கப்பட்ட போது, ஒரு வருடம் நமக்கு நல்ல படம் அமையவில்லை என்பதற்காக தமிழ் பட உலகில் நல்ல இயக்குநர் என அர்த்தம் அல்ல. அதற்கு வாய்ப்பு அமையவில்லை என்றே நினைக்கிறேன். ஆகவே மாறி மாறி நடக்கத்தான் செய்யும். என்னை பொறுத்தவரை இந்திய படம் வெற்றி பெற்றுள்ளது தான் நல்லது என்றார் கமல்.

ரஜினி, விஜய்யுடன் நடிப்பீங்களா

ரஜினி, விஜய்யுடன் நடிப்பீங்களா

விஜய்யுடன் பேசி உள்ளேன். கண்டிப்பாக விரைவில் ஒரு படம் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மூலம் வரும். ரஜினியுடன் நடிப்பதற்கு முதலில் அவரிடம் கேட்க வேண்டும், அதற்கு பிறகு இவரிடம் (லோகேஷ் கனகராஜ்) கேட்க வேண்டும். நாங்கள் மூன்று பேரும் ஒப்புக் கொண்டால் பிறகு உங்களிடம் கூறுகிறோம். ரஜினியுடன் சேர்ந்து ஒரு படம் நடிக்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன் என்றார்.

விக்ரமில் லிப்லாக் சீன் இல்லையே

விக்ரமில் லிப்லாக் சீன் இல்லையே

விக்ரம் படத்தில் லிப்லாக் காட்சிகள் இல்லை என்று பல கேட்க, அது உங்கள் ஆசை. என் ஆசை இல்லை என பதிலளித்தார் கமல். அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தில் ஹீரோயினே கிடையாது இல்லையா, அதனால் தான் அப்படி ஒரு சீனுக்கு அவசியம் இல்லாமல் போனது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X