மாறு வேடத்தில் சென்ற விஜய்.. செம ஃபன்னான ஆள்தான் போல.. என்ன நடந்ததுனு பாருங்க?
சென்னை: நடிகராக இருந்த விஜய் இப்போது இந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கிறார். திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் இவர். சி.எம் ஆனதிலிருந்து தனது செயல்பாடுகளால் வரவேற்பையும், விமர்சனத்தையும் தொடர்ந்து பெற்றுவருகிறார். இந்நிலையில் அவரது வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவையே அதிர வைத்திருக்கிறது.
விஜய் சினிமாவுக்குள் வந்தபோது அவரது தந்தையின் துணை இருந்ததுதான். ஆனால் அதற்கு பிறகு அவர் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டே சென்றதால்தான்; அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய ஒரு ரசிகர் கூட்டம் உருவானது. அந்த ரசிகர்களின் படையை நம்பித்தான் சில வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தையும் தொடங்கினார் விஜய். அவர் கட்சி ஆரம்பித்தபோது யாருமே அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்ல. திமுக தலைவர் ஸ்டாலின், அக்கட்சியின் இளைஞரணி தலைவர் உதயநிதி உள்ளிட்டோர் எல்லாம் தவெக என்ற பெயரையோ விஜய் என்ற பெயரையோ உச்சரிக்கக்கூடவில்லை.

எல்லா ஏரியாக்களிலும் கில்லி: விஜய்யால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றுதான் பலரும் சொன்னார்கள். ஆனால் அவரோ சைலெண்ட்டாக இருந்து பெரிய சம்பவத்தையே செய்துவிட்டார். மொத்தம் அவரது கட்சி 108 தொகுதிகளில் வென்றது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் இல்லாததால்; நெருக்கடிக்கு உள்ளான விஜய் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று இந்தியாவே உற்று நோக்கியது.
மாஸ்டர் ஸ்ட்ரோக்: தான் ஒரு மதசார்பற்றவன் என்பதை நிரூபிக்கும் வாய்ப்பையும், அந்த சூழ்நிலையில் உருவாக்க நினைத்தார். எனவே அதிமுக - பாஜக பக்கம் செல்லாமல்; திமுக கூட்டணியில் இருந்த விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், காங்கிரஸ் ஆதரவை கோரினார். அவர்களும் ஆதரவு கொடுக்க; முதலமைச்சராக பதவியேற்றுவிட்டார். மேலும் தேர்தலுக்கு பின்னால் கூட்டணிக்கு வந்தவர்களுக்கு அமைச்சரவையிலும் இடம் கொடுத்தார். இது மாஸ்டர் ஸ்ட்ரோக் என்றே தவெகவினரால் கொண்டாடப்படுகிறது
விமர்சனமும், ஆதரவும்: சி.எம் ஆனதிலிருந்து சின்சியராக உழைத்துதான் வருகிறார். இருப்பினும் அவரது சில செயல்பாடுகள் பெரிய விமர்சனத்தை சந்தித்திருக்கின்றன. சமீபத்தில்கூட, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டார். அதேபோல் ஜெகதீஷ் பழனிசாமிக்கும் அரசு பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் வைத்து எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சன அம்புகளை ஏவுகிறார்கள். அவரோ வழக்கம்போல் சைலெண்ட் மோடிலேயே இருக்கிறார்.
அதில் ஆர்வம் இல்லை: அவரது அந்த சைலெண்ட் மோடும் விமர்சனத்துக்கு உள்ளாகிறது. மேலும், தமிழ்நாட்டில் முதலமைச்சர்களை பொறுத்தவரை மக்களை அருகே சென்று சந்திக்கும் வழக்கமுடையவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஜெயலலிதா காலத்தில் வேண்டுமானால் அது கொஞ்சம் பிசகியிருக்கலாம். மற்ற முதலமைச்சர்கள் ஒரு பிரச்னையின்போது நேரடியாக மக்களை சந்திப்பார்கள். ஆனால் விஜய்யோ அந்த மாதிரியான நடவடிக்கைகளில் பெரிய ஈடுபாடு காட்டுவதில்லை.
ட்ரெண்டாகும் வீடியோ: ஆனால் தவெகவை சேர்ந்த ஆனந்த்ஜித் என்பவரோ, முதலமைச்சர் விஜய் இரவு நேரங்களில் மாறு வேடத்தில் செல்கிறார் என்று கூறியிருந்தார். ஆனால் அப்படியெல்லாம் இப்போது நடப்பதில்லை என அனைவருக்குமே தெரியும். இருப்பினும் விஜய் முதலமைச்சராவதற்கு முன்னர் அது மாதிரி நடந்திருக்கிறது. அதாவது சென்னையில் தன்னுடைய பைக்கில் ஹெல்மெட்டை போட்டுக்கொண்டு சென்றார்.
அப்போது சாலையில் நின்றிருந்தவர்களிடம், கஸ்தூரிபா நகருக்கு எப்படி செல்ல வேண்டும் அங்கேதான் நடிகர் விஜய் இருக்கிறாரா என்று கேட்டார். அதற்கு அவர்களும், கேட்பவர் விஜய் என்பது தெரியாமல் பதில் சொன்னார்கள். இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பலரும் பகிர்ந்து, விஜய்யை பாருங்கள் எப்படி மாறு வேடத்தில் சென்றிருக்கிறார் என சொல்லி ட்ரெண்டாக்கிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
