Jana Nayagan First Review - ஜனநாயகன் முதல் விமர்சனம்.. அங்குட்டு இங்குட்டு திரும்ப முடியலையாம்

சென்னை: விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் ஜனநாயகன் திரைப்படத்துக்கு நேற்று சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அந்தப் படம் இந்த மாதத்துக்குள்ளேயே ரிலீஸாக வாய்ப்புகள் இருக்கின்றன. முதலமைச்சரான பிறகு வெளியாகும் விஜய் படம் என்பதால் ரசிகர்கள் திருவிழாவுக்கு தயாராகிவருகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

விஜய் - ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இதில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். கடந்த ஜனவரி மாதமே படம் ரிலீஸாகியிருக்க வேண்டியது. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காதது தொடங்கி; முழு படமும் சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் லீக்கானதுவரை இல்லாத சிக்கல்களை எல்லாம் அந்தப் படம் சந்தித்துவிட்டது.

Jana Nayagan First Review - Early Reactions Call Vijay - H Vinoth Movie A Hollywood-Level Entertainer
Photo Credit:

படத்துக்கு கிடைத்த சான்றிதழ்: மறு தணிக்கைக்கு அனுப்பியும் கடந்த சில மாதங்களாக படத்துக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை. விஜய் முதலமைச்சராகவே ஆகிவிட்டார். சூழல் இப்படி இருக்க நேற்று படத்தை தணிக்கை அதிகாரிகள் பார்த்ததாகவும்; படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த மாதத்துக்குள்ளேயே ஜனநாயகன் ரிலீஸாகலாம் என்று தெரிகிறது.

Also Read
Gatta Kusthi 2 Public Review - கட்டா குஸ்தி 2 பப்ளிக் விமர்சனம்.. படத்துக்கு பாராட்டு குவியுதே ப்பா!
Gatta Kusthi 2 Public Review - கட்டா குஸ்தி 2 பப்ளிக் விமர்சனம்.. படத்துக்கு பாராட்டு குவியுதே ப்பா!

முதலமைச்சர் விஜய் நடிக்கும்: இந்தப் படத்தில் விஜய் பெயரோடு தமிழ்நாடு முதலமைச்சர் என்றும் போட படக்குழு திட்டமிட்டிருக்கிறது. முதலில் அதற்கு சி.எம் தரப்பிலிருந்து ஒப்புதல் வரவில்லை என்றும்; இப்போது அந்த ஒப்புதல் கிடைத்துவிட்டதாகவும் நெருங்கிய வட்டாரம் கூறுகிறது. எனவே ஸ்க்ரீனில், 'தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிக்கும்' என போடும்போது ரசிகர்கள் தரையில் இருக்கமாட்டார்கள் என்பது மட்டும் உறுதி.

அந்தணன் பேட்டி: இந்நிலையில் ஜனநாயகன் படம் குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கிறார். படம் பார்த்தவர்கள் சொன்ன விமர்சனத்தை பகிர்ந்திருக்கும் அவர், "ஜனநாயகன் படத்தை சிலர் பார்த்துவிட்டார்கள். அவர்களிடம் பேசியதை வைத்துதான் இவ்வளவு கான்ஃபிடென்ஸாக பேசுகிறேன். பகவந்த் கேசரி படத்திலிருந்து கொஞ்சம் மட்டும்தான் எடுத்திருக்கிறார்களாம். மற்றபடி ஹெச்.வினோத் ஸ்டைலில்தான் இருக்கிறதாம்.

ஹாலிவுட் தரத்தில்: மேலும் இந்தப் படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். விஜய்யின் படங்களிலேயே இதுதான் உச்சம் என்றும் சொல்கிறார்கள். முழு படத்தில் ஒரு நிமிடம்கூட, இந்தப் பக்கமோ அந்தப் பக்கமோ திரும்ப முடியவில்லை. அந்த அளவுக்கு பேக்கேஜான படமாக இருந்தது. நான் ஃபோனைகூட கையில் எடுக்கவில்லை என சொல்கிறார்கள். படம் விறுவிறுவென்று இருக்கிறது. ஜனநாயகன் மாதிரி இனிமேல் விஜய்க்கு கிடைக்காது என சொல்கிறார்கள். ஹெச்.வினோத்துக்கும் புகழாரம் சூட்டுகிறார்கள்" என்றார்.

இதை பார்த்த விஜய் ரசிகர்கள் துள்ளி குதிக்கிறார்கள். அதேசமயம் விஜய்யின் எதிர் தரப்பினரோ, 'யார்? எதில்? படத்தை பார்த்தார்கள். இணையத்தில் லீக்கான படத்தை பார்த்தவர்களிடம் பேசிவிட்டு அந்தணன் இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறார் என்றும் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X