Gatta Kusthi 2 Public Review - கட்டா குஸ்தி 2 பப்ளிக் விமர்சனம்.. படத்துக்கு பாராட்டு குவியுதே ப்பா!
சென்னை: செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கட்டா குஸ்தி 2. விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, யோகி பாபு, மோக்ஷா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நேற்று திரையிடப்பட்ட ப்ரிவ்யூ ஷோவில் படத்துக்கு சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. இந்நிலையில் படம் பார்த்த மக்கள் தங்களது விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்கள்.
விஷ்ணு விஷாலின் கரியரில் கட்டா குஸ்தி படத்துக்கு முக்கிய இடம் உண்டு. சில தோல்விகளில் துவண்டிருந்த அவருக்கு அந்தப் படம்தான் ஹிட்டை கொடுத்தது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள விஷயங்கள் படத்தில் பல இருந்தாலும்; நல்ல கதை என்பதால் நடிக்க ஒத்துக்கொண்டார். படமும் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து இரண்டாவது பாகத்தையும் இயக்குநர் உருவாக்கினார்.

கட்டா குஸ்தி 2: முதல் பாகம் போன்றே இரண்டாவது பாகத்தையும் ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என அத்தனை விஷயங்களையும் இயக்குநர் பார்த்து பார்த்து செய்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் நடிகை மோக்ஷாவும் கோலிவுட்டுக்கு வந்திருக்கிறார். இன்று படம் ரிலீஸாகியிருக்கும் சூழலில்; படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்கள்.
கட்டா குஸ்தி 2 பப்ளிக் விமர்சனம்: படம் பார்த்த ரசிகர் ஒருவர் பேசுகையில், "படம் நன்றாக இருக்கிறது. இரண்டு பாகங்களுமே நன்றாக இருக்கின்றன. படத்தில் கேரளா டீச்சர் நடனம் ஆடியது ரொம்பவே நன்றாக இருந்தது. சூப்பராக இருந்தது" என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய ரசிகை, "படம் நன்றாக இருந்தது. அனைத்து பெண்களுக்கும் இன்ஸ்பையரான கதை. இந்தப் படத்தை பார்த்தால் விவாகரத்து செய்ய வேண்டும் என இருப்பவர்களும் திருந்திவிடுவார்கள். படத்தின் கடைசி சீன், கோர்ட் சீன்கள் எல்லாம் சூப்பராக இருக்கின்றன. குடும்பத்தோடு பார்க்க வேண்டும்" என்று புகழ்ந்தார்.
படம் போர் அடிக்கவில்லை. முதல் பாகத்தைவிடவும் இது சூப்பராக இருக்கிறது. குடும்ப ரசிகர்கள் எல்லாம் கொண்டாடி பார்க்கிறார்கள். க்ளைமேக்ஸ் எல்லாம் ஃபன்னாக இருக்கிறது. படத்துக்கு ஹேப்பி எண்டிங். படம் பார்ப்பதற்கு ஒர்த்துதான். அனைத்து ரசிகர்களுக்கும் இந்தப் படம் கண்டிப்பாக பிடிக்கும். குடும்பத்தோடு பார்க்கும் மாதிரியான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்கள்" என பாசிட்டிவ்வாக பேசியிருக்கிறார்.
பாக்யராஜ் சார் படம் மாதிரி: இன்னொருவர், 'படம் சூப்பராக இருக்கிறது. பாக்யராஜ் சார் படம் மாதிரி இருக்கிறது. குடும்ப ரசிகர்கள் அனைவருக்கும் கண்டிப்பாக இந்தப் படம் பிடிக்கும். ஒவ்வொரு சீனையும் கெஸ் செய்யவே முடியவில்லை. படத்தில் நேரம் போனதே தெரியவில்லை. எதையும் குறை சொல்லும்படி இல்லை. எந்த கிளாமரும் இல்லாமல் இருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடித்துவிடும். கட்டா குஸ்தி முதல் பாகத்தைவிடவும் ஒரு படி மேலேதான் இருக்கிறது. இப்படி ஒரு படத்தில் நடித்ததற்கு விஷ்ணு விஷாலை பாராட்ட வேண்டும்.
கோர்ட் சீனில் எல்லாம் தியேட்டரே விழுந்து விழுந்து சிரித்தது. படம் டபுள் ஓகேதான். கிட்ஸிலிருந்து அனைவருமே இந்தப் படத்தை என்ஜாய் செய்யலாம். நல்ல படம். அனைவரும் பார்க்க வேண்டிய படம். கணவனும்,மனைவியும் ஒத்துப்போனால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்பதை தெளிவாகவும், சூப்பராகவும் சொல்லியிருக்கிறார்கள்" என்றிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
