விசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்!
விசுவாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: அஜித்தின் விசுவாசம் திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் என தயாரிப்பாளர் தியாகராஜன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அஜித் நடிப்பில் சிவா இயக்கி வரும் விஸ்வாசம் பட வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புகள் ஏறக்குறைய முடிந்து விட்ட நிலையில், அஜித் தன் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் பேசி வருகிறார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் படத்தில் ரோபோ சங்கர், தம்பி ராமையா, யோகி பாபு ஆகியோரும் உள்ளனர்.

ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இப்படம், வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீசாக இருக்கிறது. இதனை அப்பட தயாரிப்பாளர் தியாகராஜன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும், இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள அஜித், இரண்டு பாடல்களுக்கு அமர்க்களமாக நடனம் ஆடி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிச்சயம் விசுவாசம் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் எனவும் தியாகராஜன் கூறியுள்ளார்.
['என் அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க' சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்!]
ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்துள்ள பில்லா பாண்டி இசை வெளியீட்டு விழாவில் இத்தகவலை அவர் தெரிவித்தார். அஜித்தின் தீவிர ரசிகராக இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் விசுவாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், அவர் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











