விஜய்யா? யாரு டாடி அது?.. மாஸ்டர் மகேந்திரன் என்ன சொல்லிருக்காரு பாருங்க.. அப்போவே அப்படி.. ஆத்தாடி இது ஓவர்
சென்னை: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கலக்கிய மாஸ்டர் மகேந்திரன்; வளர்ந்த பிறகு பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை. சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மின்வெட்டு குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார். அதனைத் தொடர்ந்து அதற்கு விளக்கமும் அளித்தார். அதனையடுத்துதான் அவரை சோஷியல் மீடியாவாசிகள் டிஸ்சார்ஜ் செய்தார்கள் என்பத் குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக எக்கச்சக்க படங்களில் நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். பல ஹீரோக்களுடன் நடித்துவிட்ட அவர்; வளர்ந்த பிறகும் அதே அளவு பிஸியாக இருப்போம் என்றுதான் எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைக்கவில்லை. அவருக்கு இப்படி அதிகம் வாய்ப்பு வராமல் போனதற்கு அவரது ஆட்டிட்யூட் மட்டுமே காரணம் என்று திரைத்துறையில் பலரும் சொல்வார்கள். கடைசியாக அவர் 29 திரைப்படத்தில் வில்லன் ரோலை ஏற்றிருந்தார்.

மின்வெட்டு பற்றி: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டியில், "இவ்வளவு நாள் மின்சார தடை இல்லையா? ஜாலியாக இருந்தீர்களா?.. சரி ஆறு மாதங்கள் மின்வெட்டுடன் இருக்க முடியாதா?.. சோலார் சிஸ்டம் என்ற ஒன்றை கண்டுபிடித்தது இவர்களுக்கு தெரியுமா? தெரியாதா? என்று எனக்கு தெரியவில்லை. மின்வெட்டு இருந்தால் என்ன? ஆறு மாதங்கள் கேள்வி கேட்காதீர்கள் என சொல்கிறேன்.
பதில் வேண்டுமா? வேண்டாமா?: என் வீட்டிலிருந்து கூட மின்சாரத்தைஎடுத்துக்கொள்ளுங்கள். சோலாரிலிருந்து எப்படி லைட்டை எரிய வைக்க வேண்டும்; ஃபேனை ஓட வைக்க வேண்டும் என எனக்கு தெரியும். விஜய்யிடம் கேள்வி கேட்டால் உடனே மின்சாரம் வந்துவிடுமா?.. எத்தனை காலம்தான் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருப்பீர்கள். கேள்வி மட்டும் கேட்டால் பதில் கிடைத்துவிடுமா?.. கேள்வி கேட்பதை நிறுத்தினால்தான் பதில் கிடைக்கும்" என பேசியிருந்தார். அவரது பேசில் இருந்த ஆட்டிட்ட்யூட்டையும், கருட்தையும் பார்த்துவிட்டு ஒட்டுமொத்த நெட்டிசன்களும் அவரை தங்கள் ட்ரோல் பிரிவில் அட்மிட் செய்து; அடி அடி என்று அடித்தார்கள்.
விளக்கமளித்த மகேந்திரன்: இனியும் தாங்காது என்ற நிலைமை வந்தவுடன் இதுகுறித்து விளக்கமளித்தார். அதில் அவர், சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் ரீல்ஸ்களால் நான் கூறிய கருத்துக்கள் முழுமையாக இருக்காது. அதுதான் இங்கே பிரச்னையாக மாறியிருக்கிறது. நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை என்பதையும் இங்கே சொல்லிக்கொள்கிறேன். மின்சார தேவையை சமாளிக்க சோலார் மின்சாரமே சிறந்த வழி என்றும், கொச்சி விமான நிலையம் போன்று நம் மாநிலத்திலும் சோலார் முறையை ஏன் செயல்படுத்தக்கூடாது என்றுதான் கேட்டேன். என்னை திட்டி தீர்ப்பவர்கள் உண்மையை அறியாமல் செயல்படுகிறார்கள். தவறாக புரிந்துகொண்டவர்கள்தான் தற்குறி. நான் தற்குறியா?.. எனது கருத்தில் நான் உருதியாக இருக்கிறேன்" என தெரிவித்தார்.
விஜய் பற்றி: அதனையடுத்துதான் அவரை சமூக வலைதளவாசிகள் டிஸ்சார்ஜ் செய்தார்கள். இந்நிலையில் அதே பேட்டியில் அவர் பேசிய இன்னொரு கருத்தும் இப்போது ட்ரெண்டாகியிருக்கிறது. விஜய் குறித்து பேசிய அவர், "முதலில் நான் விஜய்யுடன் கோயமுத்தூர் மாப்பிள்ளை படத்தில்தான் நடித்தேன். அப்போது அவர் ரொம்ப இளமை. சொல்லப்போனால் குழந்தை நட்சத்திரம்தான். இவர்தான் ஹீரோ. இவரும் ஒரு குழந்தை நட்சத்திரம் என்று என்னுடைய அப்பா சொல்லி அறிமுகப்படுத்தினார்.
ஆமா யார் அந்த விஜய்?: அதனையடுத்து மின்சார கண்ணா திரைப்படத்தில் நடித்தேன். அப்போது அப்பா என்னிடம் வந்து, 'விஜய்தான் ஹீரோ' என சொன்னார். உடனே நான், 'விஜய்யா? எந்த விஜய்?.. யார் அது?' என்று கேட்டேன். அதற்கு அவரோ, 'டேய் நீ அவரோடு கோயமுத்தூர் மாப்பிள்ளை படத்தில் நடிச்சியே' என சொல்ல; 'ஓ அவரா' என கேட்டுவிட்டு நடித்தேன். அந்தப் படத்தில் அவருடன் மொத்தம் 45 நாட்கள் இருந்தேன். நிறைய என்ஜாய் செய்தோம்" என்றார்.
இதை பார்த்த ரசிகர்களோ,'1998ல் விஜய் ஃபேமஸான ஹீரோதான். பெயரை சொன்னாலே அனைவருக்கும் தெரியும். ஏனெனில், அதற்கு முன்னதாகவே பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை எல்லாம் வந்து ஹிட்டாகி அவரை வெளிச்சத்தில்தான் வைத்திருந்தார். ஆனால் மாஸ்டர் மகேந்திரனுக்கு மட்டும் விஜய்யை தெரியவில்லை போல என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
