யார் அந்த Ghost...கமலா? விஜய் சேதுபதியா? சூர்யாவா?
சென்னை : விக்ரம் படத்தின் டீசர், டிரைலரில் ghost என்ற வார்த்தை இடம்பெறுகிறது. இதில் கோஸ்ட் என யாரை சொல்கிறார்கள் கமலையா, விஜய் சேதுபதியையா, சூர்யாவையா. இவர்களுக்கு மூன்று பேரும் என்ன ரோலில் நடித்துள்ளார் என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் ஜுன் மாதம் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. நேற்று படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகளும் நடந்து வருகிறது.
விக்ரம் டிரைலரில் சூர்யா இருக்காரா... இந்த சீனை நீங்க பார்த்தீங்களா ?\

விக்ரம் படத்தில் ghost
விக்ரம் படத்தின் டீசர் மற்றும் டிரைலரில், Once upon a time there lived a ghost என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. ஆனால் டீசரில், Once upon a time there lived a ghost named Vikram என வாசகமாக இடம்பெற்றிருக்கும். அதே சமயம் டிரைலரில் Once upon a time there lived a ghost என கமல் சொல்வது போல் அமைந்திருக்கும். நரேன் ஒருவருடன் பேசுவதாக வெளியான வீடியோவில் கோஸ்ட் பற்றி தகவல் தெரிந்ததா என கேட்பார்.
Recommended Video

யார் அந்த ghost
இவற்றை வைத்து பார்க்கும் போது, யாரோ ஒரு முக்கிய கேரக்டரை தான் கோஸ்ட் என குறிப்பிடுகிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது. இதில் கமல், மனைவியை இழந்து, மகனுடன் வசிக்கும் முன்னாள் போலீஸ் அதிகாரி ரோலில் நடிக்கிறார். அவர் வில்லன்களை பழிவாங்குகிறார் என்பது தெரிகிறது. விஜய் சேதுபதி வில்லன் ரோலில் நடிக்கிறார். இவரிடம் விசாரணை நடத்தும் போலீசாக ஃபகத் ஃபாசில் நடிக்கிறார் என்பதாக டிரைலரில் காட்டப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி, சூர்யா ரோல் இதுவா
தங்க பல் வைத்த வில்லன் ரோலில் தான் விஜய் சேதுபதி நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் விஜய் சேதுபதி வரும் காட்சிகள் பிளாக் அண்ட் ஒயிட்டில் காட்டப்படுவதால் அவர் பிளாஷ்பேக் சீன்களில் மட்டுமே வருகிறாரா அல்லது படம் முழுவதும் வருகிறாரா என்பது தெரியவில்லை. வில்லனாக, கேங்ஸ்டர் ரோலில் நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் வாரிசாக தான் சூர்யா நடித்துள்ளாராம்.

இவர் தான் ghost ஆ
ஆனால் சூர்யா வரும் காட்சிகள் க்ளைமாக்சில் தான் இடம்பெறுகிறதாம். இது கைதி 2 படத்தின் ஆரம்பம் என்று கூட சொல்கிறார்கள். போலீசாரால் கைது செய்யப்பட்டு, அழைத்து செல்லப்படுவது போல் காட்டப்படுவதால் கோஸ்ட் என விஜய் சேதுபதி அல்லது கமலை தான் குறிப்பிடுகிறார்கள் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications