விக்ரம் டிரைலரில் சூர்யா இருக்காரா... இந்த சீனை நீங்க பார்த்தீங்களா ?

சென்னை : விக்ரம் டிரைலரில் சூர்யா இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் டிலைரரை திரும்ப திரும்ப பார்த்து வருகின்றனர். படத்தில் சூர்யா இருப்பதை டைரக்டர் லோகேஷ் கனகராஜே கன்ஃபார்ம் செய்து விட்டதால் சூர்யாவின் ரோல் என்ன என்பதை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Recommended Video

விடியலை யார் பார்க்கணும்னு நான் தான் முடிவு பண்ணுவேன்!... Surya இருக்காரா? | Filmibeat Tamil

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. பான் இந்தியன் படமாக 5 மொழிகளில் விக்ரம் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ நேற்று வெளியிடப்பட்டது.

விக்ரம் படத்தில் சூர்யா

விக்ரம் படத்தில் சூர்யா

விக்ரம் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாகவும், அவர் நடித்த காட்சிகள் எண்ணூர் துறைமுகத்தில் படமாக்கப்பட்டதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் விதமாக விக்ரம் செட்டிற்கு வந்த கமல், சூர்யாவை கட்டிப்பிடிப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி செம டிரெண்டானது. இதனால் சூர்யா என்ன ரோலில் நடித்துள்ளார் என்பது பற்றி பல தகவல்கள் வெளியாகின.

கன்ஃபார்ம் செய்த லோகேஷ்

கன்ஃபார்ம் செய்த லோகேஷ்

இந்நிலையில் நேற்று நடந்த விக்ரம் ஆடியோ விழாவில் பேசிய டைரக்டர் லோகேஷ் கனகராஜ், ஆமாம். படத்தில் சூர்யா சார் இருக்கிறார். இதை சஸ்பென்சாக வைக்க நினைத்தேன். ஆனால் லீக் ஆகி விட்டது என்றார். ஆனால் சூர்யா வரும் காட்சிகள் படத்தின் டிரைலரிலேயே இடம்பெற்றிருப்பதை ரசிகர்கள் சிலர் கண்டுபிடித்து, வெளியிட்டு விட்டனர். இதனால் விக்ரம் பட டிரைலரை சூர்யா ரசிகர்கள் திரும்ப திரும்ப பார்த்து வருகின்றனர்.

விக்ரம் டிரைலருக்கு இத்தனை பார்வைகளா

விக்ரம் டிரைலருக்கு இத்தனை பார்வைகளா

விக்ரம் டிரைலர் வெளியிடப்பட்ட 21 மணி நேரத்தில் 12 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. யூட்யூப் டிரெண்டிங் வீடியோக்களில் விக்ரம் டிரைலர் தான் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் கமல் மட்டுமல்ல, சூர்யாவும் தான் என சொல்கிறார்கள். சூர்யா வரும் காட்சியை பார்க்க பலரும் இந்த டிரைலரை திரும்ப திரும்ப பார்த்து வருகிறார்கள்.

டிரைலரில் சூர்யாவை பார்த்தீங்களா

டிரைலரில் சூர்யாவை பார்த்தீங்களா

ஆனால் டிரைலரின் ஆரம்பத்திலேயே சூர்யா வரும் காட்சிகள் இடம்பெறுகிறது. டிரைலரின் ஆரம்பத்தில் ரத்த கறையுடன் இருக்கும் வெட்டு கத்தியை கீழே வீசுவது போல் ஒரு காட்சி வரும். அதன் அருகே ஒருவர் நிற்பதாக காட்டப்படுவது வேறு யாமில்லை சூர்யா தானாம். அதே போல் ரவுடிகள் சுற்றி வளைத்து தாக்க வரும் போது, வெள்ளை சட்டை அணிந்த ஒருவர் திரும்பி நின்று அவர்களுடன் சண்டை போடுவதாக காட்டப்படும். அதுவும் சூர்யா தானாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X