60 வயது ஆகுது.. யாரும் பெண் தரவில்லை.. தனிமையில் இருக்கும் பாவா லட்சுமணன்.. காரணம் இதுதான்
சென்னை: நடிகர் பாவா லட்சுமணனுக்கு சில வருடங்கள் முன்பு கால் விரல்கள் அகற்றப்பட்டன. அதனையடுத்து தங்குவதற்கு வீடு இல்லாமல் தவித்த அவருக்கு; பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் எம்.எல்.ஏ ஹாஸ்டலில் ஒரு வீட்டை ஏற்பாடு செய்துகொடுத்திருக்கிறார். மேலும் லெஜண்ட் சரவணன் உள்ளிட்டோரும் பண உதவி வழங்கினார்கள். இந்நிலையில் தான் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறித்து விளக்கமளித்திருக்கிறார் அவர்.
தமிழ் சினிமாவில் சூப்பர் குட் பிலிம்ஸ் ரொம்பவே ஃபேமஸான மற்றும் பாரம்பரியமான தயாரிப்பு நிறுவனம் ஆகும். அதன் நிறுவனர் ஆர்.பி.சௌத்ரி அண்மையில்தான் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அந்த நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் பாவா லட்சுமணம். அதற்கு பிறகு கால ஓட்டத்தில் அவரும் நடிகராக மாறிவிட்டார். தன்னுடைய வசனங்கள், நடிப்பு மூலம் பிரபலமடைந்து வடிவேலு, விவேக் என முன்னணி காமெடி நட்சத்திரங்களுடன் நடித்தார்.

நல்ல நடிகர்: பாவா லட்சுமணனின் நடிப்பு அனைத்து தரப்பினரையும் கவரும்படிதான் இருக்கும். காட்சிக்கு என்ன தேவையோ அதை அப்படியே அச்சு பிசகாமல் கொடுப்பதில் வல்லவர். ஆனந்தம், மாயி என பல படங்களில் அவரது காமெடி நடிப்பு அட்டகாசமாக அமைந்தன. ஒருகட்டத்தில் அவருக்கு உடல்நல குறைவு உள்ளிட்ட சில காரணங்களால் சினிமா வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கிவிட்டன. அந்த நேரத்தில் சர்க்கரை அளவும் ஏற; கால் விரல்களையும் அகற்றினார்கள் மருத்துவர்கள்.
உதவிய அமைச்சர்: அந்த சமயத்தில் விஜய் சேதுபதி, கலக்கப்போவது யாரு பாலா உள்ளிட்டோர் உதவி செய்தார்கள். நிலைமை இப்படி இருக்க; அவருக்கு தங்குவதற்கு வீடு இல்லை என்ற விஷயம் சில நாட்களுக்கு முன்பு தெரியவந்தது. உடனடியாக அவரை நேரில் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், எம்.எல்.ஏ ஹாஸ்டலில் தங்கிக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்தார். அவரைத் தொடர்ந்து லெஜண்ட் சரவணன் உள்ளிட்டோரும் பாவாவுக்கு தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்தார்கள்.
ரஜினி கொடுக்கும் தொகை: இவர்கள் மட்டுமின்றி ரஜினிகாந்த்தும் தொடர்ந்து உதவி செய்துவருகிறாராம். முதலில் ஒரு லட்சம் பணம் கொடுத்த அவர்; இப்போது மாதா மாதம் செலவுக்கு 10,000 ரூபாயை பாவாவின் வங்கி கணக்கில் தன்னுடைய உதவியாளர் மூலம் போட்டுவிடுகிறாராம். மேலும் சியான் விக்ரமும் லட்ச கணக்கில் உதவி செய்தாராம். இந்நிலையில் 60 வயதாகும் பாவா லட்சுமணன் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறித்து தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் விளக்கியிருக்கிறார்.
பாவா லட்சுமணன் சொன்னது: அவர் அந்தப் பேட்டியில், "எனக்கு இப்போது 60 வயது ஆகிறது. ஆனால் திருமணம் செய்துகொள்ளவில்லை. நான் சினிமாக்காரன் என்பதால் யாரும் பெண் தரவில்லை. நாங்கள் இரட்டை பிள்ளைகள். என்னுடைய சகோதரர் ராமன். அவர் மதுரையில் ஆர்கெஸ்ட்ரா வைத்து நடத்திவருகிறார். இரண்டு பேரில் ஒருவருக்குத்தான் திருமணம் நடக்கும் என சொல்லிவிட்டார்கள். அப்படி இருந்தும் என்னுடைய அம்மா ஒரு பெண்ணுக்கு பூவெல்லாம் வைத்துவிட்டு வந்துவிட்டார்.
இதுதான் காரணம்: ஆனால் அந்தப் பெண்ணுடைய மாமாவோ, 'மாப்பிள்ளை என்ன செய்கிறார்?' என கேட்டார். அவர் சினிமாவில் மேனேஜராக இருக்கிறார் என சொன்னார்கள். உடனே அவரோ, 'சினிமாவில் மேனேஜர் என்றால் அவர் தப்பான வேலைகளை எல்லாம் செய்வார். எனவே பெண் கிடையாது என சொல்லிவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications
