நான் ஏன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன்?: பாக்யராஜ் அதிர்ச்சி தகவல்

By Siva

Recommended Video

திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகிய பாக்யராஜ்- வீடியோ

சென்னை: தான் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் பாக்யராஜ்.

சர்கார் படக் கதை விவகாரத்தில் உறுதியாக நின்று வருண் ராஜேந்திரனுக்கு நியாயம் கிடைக்க வழி வகை செய்த பாக்யராஜ் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

உறுப்பினர்கள்

உறுப்பினர்கள்

மரியாதைக்குரிய தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் என்னோட பணிவான வணக்கம்.
போட்டி இல்லாமல் அனைத்து உறுப்பினர்களோட ஏகோபித்த ஒப்புதலோட என்னை நம்ம சங்கத்துக்கு தலைவரா தேர்ந்தெடுத்தீங்க. நானும் சந்தோஷமா பொறுப்பு ஏத்துக்கிட்டு மன சாட்சியோட நேர்மையா செயல் பட்றதா உறுதிமொழி ஏத்துக்கிட்டேன். எல்லாம் நல்லபடியாதான் போயிட்டிருந்தது.

[திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகிய பாக்யராஜ்: காரணம் சர்கார்?]

புகார்

புகார்

திடீர்னு சர்கார் பட சம்பந்தமா சங்கத்துக்கு ஒரு புகார் வந்தது. அந்தப் புகாரை பரிசீலித்து சம்பந்தப்பட்ட உறுப்பினர்கிட்ட உண்மை இருப்பதா தெரிஞ்சதாலே, அவருக்கு நியாயம் வழங்க, பொறுப்பில் இருக்கற முக்கியமானவங்க எல்லாரையும் கலந்து ஆலோசிச்சு நடவடிக்கை எடுத்து நல்லபடி நியாயமா அதை செயல்படுத்தவும் முடிஞ்சது. ஆனா அதுல பல அசௌகரியங்கள் தான் சந்திக்க வேண்டி வந்தது. அதுக்கு முக்கிய காரணம்னு நான் நினைக்கிறது தேர்தல்ல நின்னு ஜெயிக்காம நான் நேடியா தலைவர் பொறுப்புக்கு வந்ததுதான்னு நினைக்கிறேன்.

விதிமுறைகள்

சங்கத்துல சில தவறான நடவடிக்கைகள் என் கவனத்துக்கு வந்தது. நிறைய விதிமுறைகளையும் மாத்தி அமைக்க வேண்டி இருக்கு. அதையெல்லாம் சரி செய்தால் ஒழிய சங்கத்தோட பெயரையும், சங்க உறுப்பினர்களோட நலனையும் காப்பாற்ற முடியாதோன்னு தோணுது. அதை உடனடியா சரி செய்ய வேண்டியதை ஒரு எழுத்தாளனா என்னோட தலையாய கடமையா நினைக்கிறேன். அதுக்கு ஒரே வழி நான் உள்பட என்னை மாதிரியே போட்டி இல்லா பதவிக்கு வந்த எல்லாருமே ராஜினமா பண்ணிட்டு முறையா தேர்தல் நடத்தி, மறுபடியும் பொறுப்புக்கு வர்றதுதான். ஆனா மற்றவர்களை நிர்பந்திக்கும் உரிமை எனக்கு கிடையாது.

தேர்தல்

தேர்தல்

சங்கம் இருக்கிற நிலைமையில், இப்ப தேர்தல் நடத்தறது, வீண் செலவுன்னு நிறையப் பேர் அபிப்ராயப்படலாம். ஆனா, சங்கமே வீணா போறதைவிட செலவு வீணாகறது தப்பில்ல. என்னோட இந்த அபிப்ராயத்தை ஏத்துக்கிறவங்க ராஜினாமா செய்யலாம். அது எப்படி நடக்குதுன்னு பார்த்துட்டு, அதுக்கப்புறம் தேர்தலை நடத்த முடிவு பண்ணினா, நான் அதுல மீண்டும் தலைவர் பதவில முறையா நின்னு, மெஜாரிட்ட ஓட்டோட ஜெயிச்சு பொறுப்பை ஏத்துக்கிட்டு, தொடர்ந்து கடமையோட செயல்பட்றேன். இப்படிக்கு, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்யும் கே. பாக்யராஜ்.

சன் பிக்சர்ஸ்

சன் பிக்சர்ஸ்

எனக்கு நேர்ந்த அசௌகரியங்கள் என்ன? ஒழுங்கினங்கள் என்னாங்கறதை சங்க நலன், நற்பெயர் கருதி நான் வெளியிட விரும்பல. அதோட, முருகதாஸிடம் நான் கெஞ்சியும் உடன் படாததாலேயே வேறு வழியே இல்லாம சன் பிக்சர்ஸ் போல ஒரு பெரிய நிறுவனத்தின், மிகப் பெரிய படமான சர்கார் படக் கதையை நான் வெளியே சொல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். இருந்தாலும் தவறு என உணர்ந்து சம்பந்தப்பட்ட சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கோருகிறேன் என்று பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X