முதல் மனைவி கொடுத்ததை மிஸ் செய்த பாக்யராஜ்.. 2வது மனைவி பூர்ணிமா செஞ்சது தெரியுமா?

சென்னை: திரைக்கதை மன்னன் என்று மக்களால் புகழப்படுபவர் இயக்குநர் பாக்யராஜ். ஏகப்பட்ட ஹிட் படங்களை இயக்கிய அவர் முதலில் பிரவீனாவை திருமணம் செய்துகொண்டார். அவர் உயிரிழந்துவிட்டதை தொடர்ந்து; நடிகை பூர்ணிமாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்கள்தான் சாந்தனுவும், சரண்யாவும். சூழல் இப்படி இருக்க உடல்நல குறைவால் இன்று அவர் உயிரிழந்தார்.

பாக்யராஜுக்கு பெரிய அறிமுகமே தேவையே இல்லை. அனைத்து தலைமுறையினருக்கும் அவரை பற்றி தெரியும். தன்னுடைய திரைப்படங்களின் கதை, திரைக்கதை, வசனத்தால் காலங்காலத்துக்கும் செழித்தே நிற்பார் அவர். தமிழில் மட்டுமின்றி ஹிந்தியிலும் அட்டகாசமான ஹிட் படத்தை கொடுத்த அவர்; ஒருகட்டத்தில் இங்கே இயக்கத்திலிருந்து ஒதுங்கி நடிக்க தொடங்கிவிட்டார். ஏற்கனவே ஹீரோவாக கலக்கிய அவர்; கடைசி காலத்தில் குணசித்திர நடிகரானார்.

Why K Bhagyaraj Never Took Off His Iconic R Ring
Photo Credit:

இரண்டு திருமணங்கள்: பாக்யராஜை பொறுத்தவரை அவருக்கு இரண்டு திருமணங்கள் நடந்திருக்கின்றன. முதலில் மௌன கீதங்கள் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்த பிரவீனாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்துகொண்ட சில வருடங்களிலேயே பிரவீனா உடல்நல குறைவால் உயிரிழந்துவிட; உச்சக்கட்ட விரக்திக்கு சென்றார். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

Also Read
கையெடுத்து கும்பிடுறேன்.. வேணும்னா நடிச்சு தரோம் சர்க்கஸ் ஆக்காதீங்க.. பாக்யராஜ் வீட்டில் கதறிய ராதிகா
கையெடுத்து கும்பிடுறேன்.. வேணும்னா நடிச்சு தரோம் சர்க்கஸ் ஆக்காதீங்க.. பாக்யராஜ் வீட்டில் கதறிய ராதிகா

சூப்பர் வாழ்க்கை: எம்ஜிஆரின் தீவிரமான ரசிகரான பாக்யராஜ் அவரது தலைமையில்தான் திருமணத்தையும் நடத்தினார். பாக்யராஜுக்கு பூர்ணிமா இரண்டாவது மனைவியாக இருந்தாலும்; அவரது வாழ்க்கையில் பிரவீனா ஏற்படுத்திய தாக்கத்தை மதித்தே வாழ்ந்துவந்தார். அதன் காரணமாக கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடிகளில் ஒன்றாக கடந்த பல வருடங்களாக வந்துகொண்டிருந்தார்கள் அவர்கள்.

R மோதிரம்: பாக்யராஜின் அடையாளங்களில் ஒன்று அவர் விரலில் அணிந்திருந்த R என்ற மோதிரம். அதாவது சினிமாவில் அவரை பெரும்பாலானோர் ராஜன் என்றுதான் அழைப்பார்கள். அதை குறிக்கும் வகையில்தான் அந்த R எழுத்துடன் மோதிரத்தை அணிந்திருந்தார். அந்த மோதிரத்தை அவருக்கு வழங்கியவர் வேறு யாரும் இல்லை; முதல் மனைவி பிரவீனாதான். அதனை அவரே ஒரு மேடையிலும் பகிர்ந்திருந்தார்.

தொலைந்த மோதிரம்: எப்போதும் விரலை விட்டு கழற்றக்கூடாது என்ற கண்டிஷனோடுதான் பிரவீனா அந்த மோதிரத்தை பாக்யராஜுக்கு வழங்கினார். அதனால் ரொம்பவே பத்திரமாக அந்த மோதிரத்தை அணிந்திருந்தார். அப்படி இருந்தும் ஒருமுறை அந்த மோதிரம் தொலைந்துவிட்டதாம். அதை கேள்விப்பட்ட பூர்ணிமாவோ; உடனடியாக அதே மாதிரியான இன்னொரு மோதிரத்தை கொடுத்து கணவரின் மனதை மகிழ செய்தாராம்.

பொதுவாக இரண்டாவதாக ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டால் அவருடன் முதலில் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததை இரண்டு பேருமே மறந்துவிடுவார்கள். அல்லது அந்த நபருக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். ஆனால் பாக்யராஜும், பூர்ணிமாவும் அதில் விதிவிலக்கு. அப்படிப்பட்ட காதலோடு வாழ்ந்த பாக்யராஜை இன்று பிரிந்திருக்கிறார் பூர்ணிமா. அவருக்கு பலரும் ஆறுதல் சொல்லிவருகிறார்கள். பாக்யராஜின் உடல் நாளை பெசன்ட் நகர் மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படவிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X