ஏன் பிக் பாஸ், கண்ணை மூடிக்கிட்டு காதை பொத்திக்கிட்டு இருக்கிறீர்களா?
Recommended Video

சென்னை: பிக் பாஸ் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று கூறிவிட்டு நீங்கள் என்ன கண்ணை மூடிக் கொண்டு, காதுகளை பொத்திக் கொண்டும் இருக்கிறீர்களா?
பிரிந்து வாழும் தனது மனைவி நித்யாவை சமாதானம் செய்து அழைத்துச் செல்லவே தாடி பாலாஜி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். பிக் பாஸ் வீட்டிற்கு வந்த புதிதில் நித்யாவிடம் நல்லபடியாக நடந்து கொண்டார்.
நித்யா தொடர்ந்து கோபப்பட்ட போது கூட பாலாஜி பொறுமையாக இருந்தார்.

நித்யா
நித்யா பிகு பண்ண தாடி பாலாஜி விட்டுக் கொடுக்க அதை பார்த்து ரசிகர்கள் பாவம்யா இந்த மனுஷன் என்று முதலில் பாவப்பட்டார்கள். ஆனால் தற்போது நிலைமையே வேறு.

பாலாஜி
தாடி பாலாஜி தொடர்ந்து தனது மனைவியை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறார். மற்ற பெண் போட்டியாளர்களிடம் தன்மையாக நடந்து கொள்ளும் அவர் நித்யாவிடம் மட்டும் மோசமாக நடக்கிறார்.

உரிமை
தாடி பாலாஜி கெட்ட வார்த்தை பேசும்போது சத்தம் வராமல் இருக்க மியூட் செய்கிறார்கள். ஆ, ஊன்னா நித்யாவை செருப்பை கழட்டி அடிக்கணும் என்கிறார். தாடி பாலாஜி திட்டுவதால் நித்யா அவ்வப்போது அழுகிறார். அதை பார்த்து பாலாஜியோ நீலிக் கண்ணீர் என்கிறார்.

பிக் பாஸ்
தாடி பாலாஜி தொடர்ந்து கெட்ட வார்த்தை பேசி வருவதை பிக் பாஸ் ஏன் ஒரு முறை கூட கண்டிக்காமல் உள்ளார். அட பிக் பாஸை விடுங்க, நம்ம கமல் கூட கண்டிக்கவில்லையே. கமல் சார், நித்யா பொய் பேசியதை அவருக்கு உணர்த்திய நீங்கள் பாலாஜியை நிச்சயம் கண்டிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











