Jana Nayagan Box Office: கருப்பு வசூலை தாண்டுவது கஷ்டம் தானா?.. ஜன நாயகன் முதல் வார வசூல் எப்படி இருக்கும்?

சென்னை: சூர்யாவின் கருப்பு படத்தின் மொத்த வசூலை விஜய்யின் ஜன நாயகன் தாண்டுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. கருப்பு படத்தின் முதல் நாள் உலக வசூலை விட ஜன நாயகன் திரைப்படம் 2 மடங்கு அதிகம் பெற்று மாஸ் ஓபனிங் செய்தாலும், தொடர்ந்து ஜன நாயகன் படம் கருப்பு படம் அளவுக்கு வசூல் ஈட்டுமா? என்றே சூர்யா ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு எதிராக அஜித் ரசிகர்கள் பெரிதாக நெகட்டிவிட்டியை பரப்பவில்லை என்றாலும், சூர்யா ரசிகர்கள் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் அதிகளவில் நெகட்டிவிட்டியை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

Will Jana Nayagan beat Karuppu Total Box Office Collection

அதிலும், பல வருடங்கள் கழித்து சூர்யாவுக்கு கருப்பு திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் படமாக அமைந்த நிலையில், அந்த படம் தான் இந்த ஆண்டின் நம்பர் ஒன் என்றும் ஜன நாயகன் கருப்பு வசூலை பீட் செய்ய முடியாது என சண்டை செய்து வருகின்றனர்.

Also Read
தேர்தலுக்கு முன் ஜன நாயகன் வந்திருந்தா 200 சீட் கன்ஃபார்ம்.. தியேட்டரில் படத்தை கொண்டாடும் ரசிகைகள்!
தேர்தலுக்கு முன் ஜன நாயகன் வந்திருந்தா 200 சீட் கன்ஃபார்ம்.. தியேட்டரில் படத்தை கொண்டாடும் ரசிகைகள்!

கருப்பு மொத்த வசூல்: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கடைசியாக கருப்பு திரைப்படம் 340 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக போஸ்டர் வெளியிட்டு சூர்யா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. இதுவரை அஜித் குமார் படமே 300 கோடி வசூலை அடையாத நிலையில், சூர்யா அந்த சாதனையை செய்துள்ளார். அடுத்து வெளியாகவுள்ள சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வியாபாரமும் பெரிதாக உள்ளதாக கூறுகின்றனர். ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படமும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருப்பு படத்தை வீழ்த்திய ஜன நாயகன்: எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், மமிதா பைஜு, பிரியாமணி, நரேன், நாசர், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜூலை 23ம் தேதி வெளியான ஜன நாயகன் திரைப்படம் முதல் நாளில் உலகளவில் சுமார் 78 கோடி வரை வசூல் ஈட்டியிருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் 40 கோடிக்கும் அதிகமான வசூலை ஜன நாயகன் ஈட்டியுள்ளது. கருப்பு திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் 32 கோடி அளவுக்கு வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended For You
Jana Nayagan Box Office Day 1 - ஜனநாயகன் முதல் நாள் வசூல் என்ன தெரியுமா?.. விஜய் கன்ட்ரோலில் பாக்ஸ் ஆஃபிஸ்
Jana Nayagan Box Office Day 1 - ஜனநாயகன் முதல் நாள் வசூல் என்ன தெரியுமா?.. விஜய் கன்ட்ரோலில் பாக்ஸ் ஆஃபிஸ்

400 கோடி வசூல் செய்யுமா ஜன நாயகன்?: முதல் நாளில் ஜன நாயகன் திரைப்படம் 78 கோடி வரை வசூல் ஈட்டிய நிலையி, வெள்ளிக்கிழமை, சனி மற்றும் ஞாயிறு என முதல் வாரத்தில் அதிகப்படியாக 250 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சம் 300 கோடி வரை வசூல் ஈட்டும் என்கின்றனர். ஆனால், 350 கோடி அல்லது 400 கோடி வசூல் ஈட்டினால் தான் கருப்பு படத்தின் மொத்த வசூலை முறியடிக்க முடியும் என்றும் ஜன நாயகன் அந்த வசூல் வேட்டையை நடத்த வாய்ப்பே இல்லை என்கின்றனர். ஆனால், அடுத்த வாரமும் தமிழ்நாட்டில் புதிய படங்கள் வெளியாகாத நிலையில், ஜன நாயகன் திரைப்படம் கருப்பு வசூலை முறியடிக்க வாய்ப்புகள் இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கணித்து வருகின்றன.

Will Jana Nayagan beat Karuppu Total Box Office Collection

ஜெயிலர் 2 வருது: லீக்கான நிலையில், ஜன நாயகன் திரைப்படம் பெரிய வசூலை ஈட்ட முடியாமல் போனாலும், இந்த ஆண்டு ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், தமிழ் சினிமாவுக்கு அந்த படம் 1000 கோடி வசூலை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X