முருகனாக மாறி காட்சிதரும் யோகி பாபு

சென்னை: தமிழ் சினிமாவில் காமெடிக்கு என்று ஒரு தனி உலகம் உண்டு அதில் நிரந்தரமாக நீடித்துக் கொண்டு இருப்பது.
மிகவும் கடினம் அப்படி நீண்ட நாள் காமெடியில் கலக்கியவர்களில் ஒருவர் தான் யோகி பாபு.

தான் நடித்த முதல் திரைப்படமான யோகியில் நடித்த பிறகு அப்படத்தின் பெயரையே தன் பெயரில் இணைத்து யோகி பாபு என்று மாற்றி கொண்டார்.
முதலில் சின்னத்திரையில் ஒளிபரப்பான லொள்ளு சபாவில் நடித்தார் யோகி பாபு.

yogi babu as hero again in cocktail

அத்தொடரின் இயக்குநர் ராம் பாலா அவரை ஜூனியர் ஆர்டிஸ்டாக பின்னாளில் நடிக்க வைத்தார். யோகி படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு ஒரு பிரேக் ஆக அமைந்தது பட்டத்துயானை திரைப்படம். மற்றும் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் உடன் இணைந்து சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் பாபு.

yogi babu as hero again in cocktail
இவரை எல்லோருக்கும் நன்கு அறிமுக படுத்திய திரைப்படம் சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே, இதில் வவ்வால் என்ற கதாபாத்திரத்தில் நடித்து காமெடியில் அனைவரையும் கவர்ந்தார்.
இதுவே இவருக்கு ஒரு அடித்தளமாக அமைந்தது. மணிகண்டனின் காக்கா முட்டை படத்தில் இவர் பேசிய எனக்கே விபூதி அடிக்க பாத்தலே வசனம் இன்று வரை ரசிக்க வைக்கிறது.

இதன் பின் பல படங்களில் நடித்து காமெடியில் கலக்கி வந்தார் யோகி பாபு. தன்னால் காமெடி மட்டுமல்லாமல் யதார்த்தமான கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்று இவரை ரசிகர்களுக்கு காட்டிய திரைப்படம்
பரியெறும் பெருமாள். தற்போது இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் யோகி பாபு.

மதுரை பின்னணியில் அதிரடியாக அடுத்த படம் ஆரம்பிக்கிறார் பாலா... சூர்யா கெஸ்ட் ரோல்.. அப்ப ஹீரோ?
பல சிறிய பட்ஜெட் படங்கள் மற்றும் புதுமுக நடிகர் மற்றும் புதுமுக ஹீரோக்கள் படங்களுக்கு என்று நேரத்தை ஒதுக்கி அவர்களுக்காக படங்களில் நடித்து கொடுக்கிறார் யோகி பாபு.

தற்போது இவர் ஹீரோவாக நடிக்கும் மூன்றாவது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு காக்டெய்ல் என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை ரா. விஜய முருகன் இயக்குகிறார்.
பி. ஜி. முத்தையா இப்படத்தை தயாரிக்கிறார்.

படத்தின் பர்ஸ்ட் லுக்கில் முருகர் போல வேடமணிந்து உள்ளார் யோகி பாபு அவருக்கு பின்னால் காக்டெய்ல் என்ற பறவை நிற்பது போன்ற ஒரு பர்ஸ்ட் லுக்யை வெளியிட்டு உள்ளனர் படக்குழு. இது போன்ற வித்தியாசமான கதைகளை யோகி பாபு தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X