லோக்கல் சரக்குடன் களமிறங்கிய யோகி பாபு: விஜய் பட இயக்குநருடன் எப்படி இந்த திடீர் கூட்டணி?
சென்னை: காமெடி வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்த யோகி பாபு, தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கி வருகிறார்.
முன்னணி ஹீரோக்கள், சிறு பட்ஜெட் படங்கள் என தமிழில் வெளியாகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபுவை கண்டிப்பாக பார்க்கலாம்.
இதனிடையே வாய்ப்புகள் கிடைக்கும் போது காமெடி ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார் யோகி பாபு.
விஜய்யை வைத்து இந்த மாதிரி படம்தான் தயாரிக்கணும்.. அமலா பாலின் வேற லெவல் ஆசை!'

அசுர வளர்ச்சி
திரைப்படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்ட்களாக நடித்து தங்களது சினிமா பயணத்தை தொடங்கியவர்கள் ஏராளம். அதில் ஒருசிலர் மட்டுமே மிகப் பெரிய வெற்றியடைவது உண்டு. காமெடி நடிகர் யோகி பாபுவும் அப்படி, சிறுசிறு கேரக்டர்களில் கூட்டத்தில் ஒருவனாக வந்துபோனவர் தான். கிடத்த வாய்ப்புகளில் எல்லாம் நச்சென்று சிக்ஸர்கள் விளாசிய யோகி பாபு, குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியடைந்தார்.

காமெடியில் கலக்கல்
தன்னிடம் எதுவெல்லாம் மைனஸாக இருந்ததோ, அதையெல்லாம் ப்ள்ஸாக மாற்றி, சினிமாவில் தனி இடம் பிடித்தார் யோகி பாபு. டயலாக் டெலிவரி, ரியாக்சன்ஸ் என யோகிபாபுவின் அத்தனை அசைவுகளும் ரசிகர்களை வயிறு குலுங்க வைக்கின்றன. இதனால், ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களின் ஃபேவரைட்டாக மாறிவிட்டார் யோகிபாபு.

ஹீரோ என்ட்ரி
காமெடியில் கலக்கினாலும் கேரக்டருக்கு தேவையான வெயிட்டேஜ் கொடுக்கும் குணசித்திர பாத்திரங்களிலும் யோகி பாபு அசத்தினார். அதேபோல் ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்து, மாஸ் காட்டினார். 'கூர்கா', 'மண்டேலா' என யோகிபாபு ஹீரோவாக களமிறங்கிய படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தன. இதனால், தற்போதும் சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் யோகிபாபு.

விஜய் பட இயக்குநருடன் கூட்டணி
இந்நிலையில், தளபதி விஜய் பட இயக்குநருடன் யோகி பாபு கூட்டணி வைத்துள்ளது, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய், தமன்னா, வடிவேலு நடிப்பில் வெளியான 'சுறா' படத்தை, எஸ்.பி. ராஜ்குமார் இயக்கியிருந்தார். முன்னதாக அவர் பொன்மனம், என் உயிர் நீதானே, கார்மேகம் ஆகிய படங்களையும் இயக்கியிருந்தார். ஆனால், விஜய்யின் 'சுறா' படம் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது.
Recommended Video

வாய்ப்பில்லாமல் தவிப்பு
'சுறா' படத்தைப் போலவே, அடுத்து இயக்கிய மேலும் 2 படங்களும் தோல்வியடைந்தன. இதனால், படங்கள் இயக்கும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த இயக்குநர் எஸ்.பி. ராஜ்குமாருக்கு, யோகி பாபு கை கொடுத்துள்ளார். இந்த முறை முழுக்க முழுக்க காமெடி கதையோடு களமிறங்கிய எஸ்.பி. ராஜ்குமார் படத்திற்கு 'லோக்கல் சரக்கு' என டைட்டில் முடிவாகியுள்ளது. இதில், யோகிபாபுவுடன் டான்ஸ் மாஸ்டர் தினேஷும் நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் சூரி வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











