குறைந்தது தங்கம் விலை!! ஒரு கிராம் ரூ.15,000க்கு கீழ் சென்றது..!! மேலும் விலை குறையுமா?

By Devika Manivannan

சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம் விலை குறைந்துள்ளது. தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த தங்கம் விலை வாரத்தின் இரண்டாவது நாளான இன்று விலை குறைந்து மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. இந்த விலை குறைவு இப்படியே நீடிக்க வேண்டும் என்பதே சாமானிய மக்களின் எதிர்பார்ப்பாகும்.

சென்னையில் கடந்த வாரத்தில் 6 வர்த்தக நாட்களில் ஒரு நாளை தவிர்த்து 5 நாட்கள் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்தது. நேற்றைய தினம் வரலாற்றிலேயே இல்லாத அளவாக புது உச்சத்தை தொட்டது. நேற்று ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 275 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 15,000 என்ற மைல் கல்லை கடந்தது. சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 15,025 ரூபாய் என புதிய வரலாற்று உச்சத்தில் விற்பனையானது.


Gold silver investment

ஒரு சவரன் தங்கத்தின் விலை 1, 20,200 ரூபாய் என வரலாற்றிலேயே இல்லாத மைல்கல்லை தொட்டது. 10 கிராம் தங்கத்தின் விலை 1.50 லட்சம் ரூபாய் என்ற உச்சபட்ச விலையை எட்டியது. தங்கத்தின் இந்த விலை உயர்வு சாமானிய மக்களுக்கு கண்ணீரை வரவழைத்தது. இந்த சூழலில் இன்றைய தினம் தங்கத்தின் விலை குறைந்து மக்களுக்கு ஆறுதலை தந்திருக்கிறது.

சென்னையில் 22 கேரட் ஆபனத் தங்கம் கிராமுக்கு 65 ரூபாய் விலை குறைந்து 14,960 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு 520 ரூபாய் விலை சரிந்து 1,19,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1, 49, 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்றைய தினம் விலை சற்றே குறைந்து இருக்கிறது. இந்த விலை குறைவு அப்படியே நீடிக்க வேண்டும் என்பதுதான் கோடிக்கணக்கான மிடில் கிளாஸ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இப்போது தங்கம், வெள்ளி வாங்கலாமா? பிப்ரவரி 1 மத்திய பட்ஜெட் வரை காத்திருக்கலாமா?

24 கேரட் தங்கம் இன்று விலை குறைந்திருக்கிறது. ஒரு கிராம் 71 ரூபாய் விலை குறைந்து 16,320 ரூபாய்க்கும் ஒரு சவரன் 568 ரூபாய் விலை குறைந்து 1, 30,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் கிராம் 12,475 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 200 ரூபாய் விலை குறைந்து 99,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் இன்று வெள்ளியின் விலை உயர்ந்திருக்கிறது. நேற்று ஒரு கிராம் 375 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரு கிராம் 387 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றை விட இன்று கிராமுக்கு 12 ரூபாயும் ஒரு கிலோவுக்கு 12,000 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.

உலக சந்தையில் தங்கம் விலை 5000 டாலர்களைக் கடந்து 5,073 டாலர்களுக்கும் வெள்ளியின் விலை ஒஒரு அவுன்ஸ் 100 டாலர்களை கடந்து 109 டாலர்களுக்கும் விற்பனை ஆகிறது. எம்சிஎஸ் வர்த்தகத்தை பொறுத்தவரை இன்றைய தினம் 10 கிராம் தங்கத்தின் விலை 1, 59,820 ரூபாய் எனவும் வெள்ளியின் விலை ஒரு கிலோ 3,59,800 ரூபாய் என்றும் உயர்ந்திருக்கிறது.

Gold Rate: 3 மாதங்களில் நடக்க வேண்டியது 25 நாட்களிலேயே நடந்தது எப்படி? இனி தங்கம் விலை என்ன ஆகும்?

உலக சந்தையிலும் எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கும் போதிலும் சில்லறை வணிகத்தில் தங்கத்தின் விலை இன்று காலை குறைந்திருக்கிறது. மாலையில் அல்லது மீண்டும் நாளை முதல் விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் உலக நிகழ்வுகள் மீண்டும் தங்கம் விலை உயர்வதற்கு சாதகமானவையாக தான் மாறி இருக்கின்றன. ஈரான் அருகே அமெரிக்க போர்க்கப்பல் நிலைநிறுத்தப்பட்டிருப்பது தென்கொரியா மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பு அறிவிப்பு உள்ளிட்டவை மீண்டும் விலையை உயர்த்தும் என சொல்லப்படுகிறது.

Credit: Goodreturns

More from Filmibeat

Read more about: notification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X