பட்ஜெட்: தங்கம், வெள்ளி விலையை குறைக்கும் அந்த ஒரு அறிவிப்பை வெளியிடுவாரா நிர்மலா சீதாராமன்?
மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நொடிக்கு நொடி மேலோங்கி வருகிறது. ஒட்டுமொத்த இந்தியாவும் குறிப்பாக மிடில் கிளாஸ் மக்களும் முக்கியமாக எதிர்பார்க்கக் கூடிய ஒரு அறிவிப்பு தங்கம் மற்றும் வெள்ளி சார்ந்ததாக இருக்கிறது.
கடந்த ஓராண்டு காலத்தில் இந்தியாவில் தங்கத்தின் விலை பல மடங்கு பெருகிவிட்டது. 22 கேரட் ஆவண தங்கம் ஒரு சவரனின் விலை 1,34,000 ரூபாய் என்று அளவை தொட்டுவிட்டது. கடந்த இரண்டு நாட்களாக விலை குறைந்து ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 1,20,000 ரூபாய் என்று அளவில் நீடிக்கிறது. வெள்ளியை பொருத்தவரை ஒரு கிராமின் அளவு 425 ரூபாய் என வரலாற்று உச்சத்தை தொட்டது தற்போது அதன் விலை 320 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது.

தங்கம், வெள்ளி ஆகிய இரண்டு முக்கியமான உலோகங்களின் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் நீடித்து வரக்கூடிய நிலையில், இந்த பட்ஜெட்டில் தங்கம், வெள்ளியின் விலையை கட்டுப்படுத்துவதற்கான அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட வேண்டும் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்தியா தனக்கு தேவையான 80%க்கும் அதிகமான தங்கம், வெள்ளியை வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. எனவே தான் வெளிநாட்டு சந்தையில் ஏற்படக்கூடிய எந்த ஒரு தாக்கமும் அப்படியே இந்திய சந்தையில் எதிரொலிக்கிறது.
உள்நாட்டில் விலை குறைய வேண்டும் என்றால் மத்திய அரசு இறக்குமதி வரியை குறைத்தாக வேண்டும். இந்தியாவில் தற்போது தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கு 6 சதவீத வரி விதிக்கப்படுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தான் தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரி என்பது 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. தங்கம் முறைகேடாக கடத்தப்படுவது, இறக்குமதி செய்யப்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் தற்போது நிலைமை வேறாக இருக்கிறது. எனவே இந்த சூழலை மத்திய அரசு எப்படி கையாள போகிறது என்பதுதான் அனைவரின் கேள்வியாகவும் இருக்கிறது. 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்கம் இறக்குமதி 1.6 சதவீதம் அதிகரித்தது 58.9 பில்லியன் டாலர் மதிப்புலான தங்கத்தை நாம் இறக்குமதி செய்தோம். வெள்ளி இறக்குமதியோ 44% உயர்ந்து 9.2 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்தது.
பட்ஜெட்டுக்கு முன்னாடியே மக்களுக்கு ஷாக்!! LPG சிலிண்டர் விலை உயர்வு!!
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு ஆகிய காரணங்களால் நாம் கையில் இருக்கும் அதிக பணத்தை கொடுத்து தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டி இருக்கிறது. எனவே மத்திய அரசு இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரி குறித்து முடிவெடுக்கும் என சொல்லப்படுகிறது.
மத்திய பட்ஜெட்டும்.. வெள்ளி விலையும்..! ஏன் தங்கத்தை போல வெள்ளியை டீல் செய்ய முடியாது?
தங்கம், வெள்ளியின் இறக்குமதி வரி குறைந்தால் உள்நாட்டில் தங்கம், வெள்ளியின் விற்பனை விலை குறையும். இது கோடிக்கணக்கான மிடில் கிளாஸ் மக்களுக்கு நற்செய்தியாக அமையும். ஒரு வேளை ரூபாயின் மதிப்பை நிலை நிறுத்த அரசு தங்கம், வெள்ளியின் இறக்குமதி வரியை உயர்த்தினால் நாட்டில் அவற்றின் விற்பனை விலை உயரும். ஏனெனில் 2012- 13ஆம் நிதியாண்டில் ரூபாய் மதிப்பை நிலை நிறுத்த மத்திய அரசு இதேபோன்று ஒரு நடவடிக்கையை எடுத்தது.
Credit: Goodreturns


Click it and Unblock the Notifications











