பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு மட்டும் வந்தா போதும்..!! தங்கம், வெள்ளி விலை மேலும் குறையும்..!!

By Devika Manivannan

ஜனவரி மாத தொடக்கத்திலிருந்து தடாலடியாக உயர்ந்து வந்த தங்கம், வெள்ளி விலை இரண்டு நாட்களாக வேகமாக சரிவடைந்து வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் இரண்டு நாட்களில் மட்டும் ஒரு கிராமுக்கு 1,900 ரூபாய் குறைந்து இருக்கிறது ஒரு சவரனுக்கு 15,200 ரூபாய் என சரிந்திருக்கிறது.

வெள்ளியை பொருத்தவரை இரண்டு நாட்களில் ஒரு கிராமுக்கு 75 ரூபாயும் ஒரு கிலோவுக்கு 75,000 ரூபாயும் விலை சரிந்துள்ளது. இதற்கு முன்பு தங்கம் விலை உயர்ந்ததற்கும் சரி, இப்போது தங்கத்தின் விலை சரிவுக்கும் சரி சர்வதேச நிலவரங்கள் தான் முக்கிய காரணமாக இருக்கின்றன. அமெரிக்க அரசு வெனிசுலா மீது எடுத்த ராணுவ நடவடிக்கை, கிரீன்லாந்தை கைப்பற்றுவதாக வெளியிட்ட அறிவிப்பு, ஈரான் மீது தாக்குதல் நடத்தப் போவதாக விடுத்த மிரட்டல் உள்ளிட்டவைதான் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தன.


Budget 2026 union budget 2026 gold import duty

அமெரிக்க மத்திய வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கை அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பிலும் தங்கம் விலை உயர்ந்தது. ஆனால் மத்திய வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை, சில நாட்களாகவே வர்த்தக மோதல்கள் , புவிசார் பதற்றங்கள் தணிந்துள்ளன. அதே வேளையில் அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக கெவின் வார்ஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு அமெரிக்க முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு வித நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்க முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளியில் இருந்து முதலீடுகளை எல்லாம் எடுத்து மீண்டும் பங்குச்சந்தை மற்றும் பத்திரங்களில் திருப்பி விட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக உலக சந்தையில் தங்கம், வெள்ளியின் விலை குறைந்திருக்கிறது அது மட்டும் இல்லாமல் தங்கம், வெள்ளி விலை ஒரு குறிப்பிட்ட உச்சத்தை எட்டி விட்டதால் இதிலிருந்து லாபம் பார்த்து விடலாம் என பலரும் லாபத்தை பதிவு செய்து வெளியேறிவிட்டனர். இந்த இரண்டு காரணங்களால் தங்கம் வெள்ளியின் விலை உலக சந்தையில் சரிந்திருக்கிறது அதன் தாக்கம் தான் இந்திய சந்தையிலும் எதிரொலிக்கிறது.

மத்திய பட்ஜெட் ஆவணங்கள் டெலிகிராமில் கசிந்ததா? நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் பரபரப்பு

அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வருவதால் வீடுகளில் திருமண நிகழ்வுகளை வைத்திருப்பவர்களுக்கு தங்கம், வெள்ளி விலை குறைவு என்பது மிக முக்கியமானதாக மாறி இருக்கிறது. தங்கம், வெள்ளி விலை குறைவு இப்படியே நீடிக்க வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு.

நாளைய தினம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026- 27ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி வரியை குறைக்கும் நடவடிக்கையை அவர் எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் தற்போது தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரி என்பது 6% என இருக்கிறது. இதனை மேற்கொண்டு அவர் குறைக்கும் பட்சத்தில் இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை மேலும் குறையக்கூடும்.

தங்க நகையை அடகு வச்சு கடன் வாங்க போறீங்களா? பிப்ரவரி 1 மத்திய பட்ஜெட் வரை வெயிட் பண்ணுங்க!!

எனவே நாளைய தினம் நிர்மலா சீதாராமன் வெளியிட போகும் அறிவிப்பில் தான் அடுத்து வரக்கூடிய நாட்களில் இந்திய சந்தையில் மேலும் தங்கம் விலை குறையுமா என்பதை முடிவு செய்யப் போகிறது. ஒருவேளை தங்கம் வெள்ளிக்கான இறக்குமதி வரியை உயர்த்தினால் இவற்றின் விலை உயரும். எனவே நாளை தினம் பட்ஜெட்டில் என்ன அறிவிப்பை அவர் வெளியிடப் போகிறார் தங்கம் விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என கோடிக்கணக்கான மிடில் கிளாஸ் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Credit: Goodreturns

More from Filmibeat

Read more about: notification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X