தங்கம் விலை: 20 நாட்களில் 21% சரிவு..!! மிடில் கிளாஸ் மக்கள் எதிர்பார்ப்பது நடக்க போகுது..!!
இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் ஜனவரி 29ஆம் தேதி அன்று வரலாற்றிலேயே இல்லாத உச்சபட்ச விலை எட்டின. ஆனால் அதன் பிறகு தங்கம் , வெள்ளி ஆகிய இரண்டுமே படிப்படியாக விலை சரிய தொடங்கின. தங்கத்துடன் ஒப்பிடும்போது வெள்ளி விலை சர்ரென சரிந்தது.
பிப்ரவரி மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருக்கிறது. ஆனால் பெரிய அளவிலான விலை உயர்வு என்பது நடக்கவில்லை. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் கடந்த 20 நாட்களில் தங்கத்தின் விலை சராசரியாக 21% வரை சரிவடைந்து இருக்கிறது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் நேற்று வர்த்தகம் முடியும்போது 24 கேரட் தங்கம் 10 கிராம் விலை 1,51,000 ரூபாயாக இருந்தது. இதுவே ஜனவரி 29ஆம் தேதி அன்று 1,93,000 ரூபாய் என கிட்டதட்ட 2 லட்சம் ரூபாயை நெருங்கி இருந்தது.

வெள்ளி விலை ஒரு கிலோ தற்போது 2,32,000 ரூபாயாக இருக்கிறது, இதுவே ஜனவரி 29ஆம் தேதி 4,20,000 ரூபாய் என வரலாற்று உச்சத்தில் இருந்தது. தங்கம் விலை தனது வரலாற்று உச்சத்தில் இருந்து 40,000 ரூபாய் அதாவது 21% சரிந்துள்ளது அதுவும் 20 நாட்களிலேயே. வெள்ளி விலை 20 நாட்களில் 1,88,000 ரூபாய் அதாவது 45% குறைந்துள்ளது.
இந்த விலை குறைவு அப்படியே நீடிக்கும் பட்சத்தில் விரைவில் இந்திய சந்தையில் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 1 லட்சம் ரூபாய்க்கும் கீழ் சரியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இது நடந்தால் சில்லறை விற்பனையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலையும் குறையும் தற்போது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 1.14 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. இது சரிந்து 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் செல்ல வாய்ப்புள்ளது.

தங்கம் விலை உயர்வால் அதிர்ச்சியில் இருக்க கூடிய கோடிக்கணக்கான இந்திய மிடில் கிளாஸ் மக்களுக்கு தங்கம் விலை சரிவு என்பது பெரிய ஜாக்பாட்டாக அமைந்துவிடும். மேற்கொண்டு தங்கம் விலை குறைவதற்கான சூழல்களே நிலவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்கா பல்வேறு நாடுகளுடன் கொடுத்த வர்த்தக மோதல்கள் மற்றும் புவி சார் பதற்றங்கள் தணிந்துள்ளன, இரண்டாவதாக அமெரிக்க டாலர் வலுவடைந்து வருகிறது, முதலீட்டாளர்கள் பலரும் தங்கம் வெள்ளியில் செய்த முதலீடுகளை விற்பனை செய்து லாபம் பார்த்தனர். இவை தான் தொடக்கத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைவதற்கு காரணமாக இருந்தன.
ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. படிச்சு படிச்சு சொன்னனே.. தங்கம், வெள்ளி பொத்து பொத்துன்னு விழுது..!!
இந்நிலையில் ரஷ்ய அரசாங்கம் தங்களுடைய சர்வதேச வர்த்தகத்தில் மீண்டும் அமெரிக்க டாலரை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. உக்ரைன் மீதான போரை அடுத்து அமெரிக்க அரசாங்கம் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தது. இதன் காரணமாக ரஷ்யாவால் அமெரிக்க டாலரை பயன்படுத்தி சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட முடியவில்லை. எனவே இதற்கு மாற்றமாக ரஷ்ய அரசாங்கம் அதிக அளவில் தங்கத்தை வாங்கி அந்த தங்கத்தையும் தங்களுடைய நாட்டு நாணயத்தையும் பயன்படுத்தி சீனா உள்ளிட்ட நாடுகளோடு வர்த்தகத்தில் ஈடுபட்டது.
இந்தியாவில் தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்கு கீழ் குறைகிறதா? ரஷ்யாவின் அதிரடி முடிவு தான் காரணம்!!
ரஷ்யாவை பின்பற்றி பல்வேறு நாடுகளும் தங்களுடைய மதிய வங்கிகள் மூலம் அதிகமாக தங்கத்தை வாங்கின. இதனால் தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்தது. தற்போது ரஷ்யா மீண்டும் டாலர் அடிப்படையிலான வர்த்தகத்திற்கு திரும்புவதற்கு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அது நடந்தால் ரஷ்யா தன் கைவசம் இருக்கும் தங்கத்தை விற்பனை செய்து அமெரிக்க டாலரை வாங்கும். அப்போது டாலரின் மதிப்பு மேலும் வலுவடைந்து தங்கத்திற்கான டிமாண்ட் குறைந்து சந்தையில் தங்கத்தின் சப்ளை அதிகரித்து அதன் விலை குறையும் என்கின்றனர் நிபுணர்கள்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Credit: Goodreturns


Click it and Unblock the Notifications