30,000 டன் தங்க புதையல்!! அதுவும் இந்தியாவில்!! ஆடிப் போன உலக நாடுகள்..! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே
இன்றைக்கும் உலகம் முழுவதுமே யார் வசம் அதிக தங்கம் இருக்கிறது என்ற போட்டி தான் நடக்கிறது. எந்த நாட்டிடம் அதிக தங்கம் உள்ளதோ உலக அரசியலில் அவற்றின் கை ஓங்கி இருக்கும். இதனால் தான் சீனா உள்பட பல நாடுகளும் போட்டி போட்டு கொண்டு தங்கம் வாங்குகின்றன.
உலக நாடுகளின் வங்கிகள் போட்டி போட்டு தங்கம் வாங்கினாலும் இந்தியர்களை மிஞ்ச முடியவில்லை என்பது தான் உண்மை. இந்தியர்கள் பாரம்பரியமாகவே தங்கத்தை வாங்கி சேமித்து வைக்கக்கூடிய பழக்கம் கொண்டவர்கள். என்னதான் பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகள், சேமிப்பு திட்டங்கள் என இருந்தாலும் ஒரு சராசரி இந்திய குடும்பத்திடம் சென்று உங்களிடம் ஒரு கணிசமான தொகை சேர்ந்தால் என்ன வாங்குவீர்கள் எனக் கேட்டால் உடனடியாக அவர்கள் தங்கத்தை தான் வாங்குவேன் என கூறுவார்கள்.

அந்த அளவிற்கு இந்தியர்களுக்கும் தங்கத்துக்கும் இடையேயான பிணைப்பை நம்மால் பிரித்து விடவே முடியாது. நாம் சம்பாதித்து வாங்கக்கூடிய தங்கம் மட்டுமில்லாமல் பரம்பரை பரம்பரையாக கைமாறக்கூடிய தங்க நகைகள் என இந்திய குடும்பங்கள் வசம் கிட்டத்தட்ட 30,000 டன்கள் தங்கம் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவின் ரிசர்வ் வங்கி வசமே சுமார் 800 டன்கள் தங்கம் தான் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அமெரிக்கா, சீனா என உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் வசம் இருக்கும் தங்கத்தை விட இந்திய குடும்பங்கள் வசம் பெரிய தங்க புதையலே இருக்கிறது. இந்த நிலையில் அண்மையில் வெளியாக இருக்க கூடிய ஒரு தகவல் இன்னும் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. அதாவது இந்தியாவின் மொத்த ஜிடிபி-ஐ விட இந்திய குடும்பங்கள் வசம் இருக்கும் தங்கத்தின் மதிப்பு அதிகமாம்.
தங்கம், வெள்ளி வர்த்தகத்தின் வெளிவராத கருப்பு பக்கம்: மார்க்கெட்ல இது தான் நடக்குதா? ஷாக் தகவல்கள்!!
2025- 2026 நிதியாண்டுக்கான இந்தியாவின் நாமினால் ஜிடிபி மதிப்பு 4.125 டிரில்லியன் டாலர்கள் ஆனால் இந்திய குடும்பங்கள் வசம் இருக்கக்கூடிய தங்கத்தின் மதிப்பு 5 டிரில்லியன் டாலர்கள். அதாவது இந்தியாவின் ஒரு ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட இந்திய குடும்பங்கள் வசம் இருக்கும் தங்கத்தின் மதிப்பு அதிகம் என்பதை தான் இது காட்டுகிறது.
2025 ஆம் ஆண்டில் ஆண்டிலும், கடந்த மாதமும் தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்தது தான் இந்திய குடும்பங்களிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பு உயர்வதற்கு முக்கிய காரணம். இந்திய குடும்பங்கள் தங்கத்தை பாதுகாப்பான ஒரு முதலீடாக தான் பார்த்து வருகிறார். ஒரு அவசர பண தேவைக்கு உடனே கை கொடுக்கும் என்பதும் ஒரு காரணம். இதனால் எவ்வளவு தான் தங்கம் விலை உயர்ந்தாலும் இந்தியர்கள் தங்கம் வாங்குவதை நிறுத்துவதில்லை.
இன்று ரூ.10 லட்சத்திற்கு தங்கம் வாங்கினால் 2030இல் அதன் மதிப்பு எவ்வளவாக உயர்ந்திருக்கும்?
ஆனாலும் இந்திய குடும்பங்கள் வசம் எத்தனை டன்கள் தங்கம் இருந்தாலும் அது பெரும்பாலும் வீடுகளுக்குள்ளே தான் முடங்கிக் கிடக்கிறது என்பதுதான் பல்வேறு நிபுணர்கள் முன்வைக்க கூடிய வாதம். வீட்டிலோ அல்லது வங்கி லாக்கரிலோ கிடக்கிறது. பிடபிள்யூசி இந்தியா நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் ரானின் பானர்ஜி இந்திய குடும்பங்கள் வசம் மிகப்பெரிய அளவு தங்கம் இருக்கிறது, அது நாம் பெருமை கொள்ள வேண்டிய விஷயம் ஆனால் இது நம்முடைய பொருளாதாரத்திற்கு பயன்படுகிறதா என்றால் இல்லை என கூறுகிறார். அந்த குடும்பங்கள் ஒரு அவசர பணத்தை என்றால் அதனை வைத்து கடன் பெறுகிறார்கள் ஆனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இது உதவுவது கிடையாது என சுட்டிக்காட்டுகிறார்.
Credit: Goodreturns


Click it and Unblock the Notifications











