தங்கம் வாங்குறதுல மக்கள் செய்யும் தவறு என்ன தெரியுமா? – புட்டு புட்டு வைக்கும் ரே டேலியோ

By Devika Manivannan

உலக சந்தையிலும் உள்ளூர் சந்தையிலும் மூன்று மூன்று வர்த்தக நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை மீண்டும் உயர தொடங்கி இருக்கிறது. இந்த சூழலில் உலக முதலீட்டு ஜாம்பவானான ரே டேலியோ தங்கத்தில் முதலீடு செய்வது குறித்து முக்கியமான ஒரு எச்சரிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

உலக சந்தையில் ஜனவரி 29ஆம் தேதி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5594 டாலர்கள் என வரலாற்று உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் தங்கம் விலை குறைய தொடங்கியது. சர்ரென தங்கம் விலை குறைந்து ஒரு அவுன்ஸ் 4498 டாலர்கள் என தொட்டதால் இந்தியாவிலும் தங்கம் விலை சரிய தொடங்கிடது. ஆனால் செவ்வாய் கிழமை முதல் மீண்டும் தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட ஒரு சதவீதத்திற்கும் மேல் உயர்வு கண்டிருக்கிறது. மீண்டும் ஒரு அவுன்ஸ் 5000 டாலர்களைக் கடந்தது. ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 5,016 டாலர்கள் என வர்த்தகம் செய்யப்பட்டது.


gold investment ray dalio

இந்த விலை உயர்வுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடப்பதற்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டாலும் அதில் என்னென்ன விவாதிப்பது என்பது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது. ஈரான் தன்னுடைய அணுசக்தி ஆயுதங்கள் குறித்தும் பேச வேண்டும் என அமெரிக்கா கூறுகிறது ஆனால் ஈரான் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.

இது ஒரு புறம் இருக்க அமெரிக்காவில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கான சம்பள உயர்வு எதிர்பார்த்த அளவைவிட மிகக் குறைவாக இருப்பதாக தரவுகள் வெளியாகி இருக்கின்றன. வேலைவாய்ப்பு சந்தை மந்தமாக இருப்பதே இதற்கு காரணம். எனவே இது அடுத்ததாக மத்திய வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான ஒரு சிக்னல் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.

தங்கம் விலையில் குண்டை போட்ட JPMorgan நிறுவனம்.. இனி தினமும் கச்சேரி தான்..!!

இந்நிலையில் உலக முதலீட்டு ஜாம்பவான் ரே டேலியோ நம்முடைய பணத்தை சேமித்து வைப்பதற்கு ஒரு சிறந்த உலோகம் தங்கம் தான் என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். துபாயில் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசியது ரே டேலியோ பாதுகாப்பான முதலீடு தங்கம் தான் தங்கம் மட்டும் தான் ஒரே நாளில் அது மாறிவிடாது என தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது தங்கத்தின் விலை 65 சதவீதம் உயர்ந்திருக்கிறது, வரலாற்று உச்சத்தில் இருந்து 16 சதவீதம் சரிந்து இருக்கிறது. இந்த சமயத்தில் தான் மக்கள் தவறு செய்கிறார்கள் என்கிறார். தங்கம் விலை ஏறிக்கொண்டே வந்தது ஆனால் திடீரென சரிந்து விட்டது இப்பொழுது நான் வாங்கலாமா வேண்டாமா என கேட்கிறார்கள். ஆனால் எப்பொழுதுமே ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள் தங்கத்திற்கு என ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை நீங்கள் ஒதுக்கியே ஆக வேண்டும் என்கிறார்.

நம்ப வைத்து ஏமாத்திய கெவின் வார்ஷ்.. தங்கம் விலை இனி தாறுமாறாக உயர போகுது..!!

தங்கம் விலை ஏறினாலும் இறங்கினாலும் மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதை நிறுத்தவில்லை என சுட்டிக்காட்டி இருக்கிறார். உங்களுடைய போர்ட்போலியோவில் தங்கத்திற்கு ஒரு இடம் வேண்டும் அது தான் உங்களை பாதுகாக்க போகிறது என கூறியுள்ளார். ஒரு மோசமான சூழல் வரும் போது தங்கம் தான் விலை உயர்ந்து உங்களுடைய போர்ட்போலியோவை காப்பாற்றும். அதே வேளையில் சாதாரண சமயங்களிலும் தங்கம் உங்களுக்கு கணிசமான ஒரு லாபத்தை நிச்சயமாக தரும் என தெரிவித்திருக்கிறார்.

எனவே உங்களுடைய பணத்தை சேமிப்பதற்கான முக்கியமான கருவியாக தங்கத்தை பயன்படுத்துங்கள் என சுட்டிக்காட்டி இருக்கிறார். மேலும் உலக அளவில் மிகப்பெரிய மூலதனப் போர் ஏற்பட போகும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

Credit: Goodreturns

More from Filmibeat

Read more about: notification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X