Kadhalikka Neramillai OTT: தியேட்டரில் எடுபடாத காதலிக்க நேரமில்லை.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னை: கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன், நித்யா மேனன், வினய்,யோகிபாபு நடிப்பில் பொங்கல் பண்டிகைக்குதியேட்டரில் வெளியான திரைப்படம் காதலிக்க நேரமில்லை. திருமணம் செய்யாமல் செயற்கை கருத்தரிப்பு, விந்து தானம் என பல விஷயத்தை பேசிய இளம் தலைமுறையை கவர்ந்த இத்திரைப்படம்கலவையான விமர்சனத்தை பெற்று கணிசமான வசூலை அள்ளியது. தற்போது இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில், நடிகை நித்யா மேனன் ஒருவரை உயிருக்கு உயிரோக காதலித்து வருகிறார். அந்த காதலுடன் திருமணத்திற்கான நடந்து கொண்டு இருக்க, நித்யா மேனனை காதல் ஏமாற்றி வேறு ஒரு பெண்ணுடன் படுக்கையில் இருக்கிறான்.இருப்பதை பார்த்த, நித்யா மேனன் திருமணத்தை நிறுத்திவிடுகிறார்.இதனால், திருமணத்தின் மீது நம்பிக்கையை இழக்கும் நித்யா மேனன், குழந்தையை பெற்றுக்கொள்வதற்கு திருமணமா. குழந்தை பெற்றுக்கொள்ள ஆண் எதற்கு என்று முடிவு செய்து, செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளமுடிவு செய்கிறாள்.

படத்தின் கதை: மறுபக்கம் பெங்களூரில் இருக்கும் ஜெயம்ரவி, ஒருபெண்ணை காதலித்து ஏமாந்துவிடுகிறான். காதல் தோல்வியால் துவண்டு போய், பல பெண்களுடன் வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்த நேரத்தில் தான் வினய் வற்புறுத்தலால் மருத்துவமனையில் ஜெயம் ரவி, விந்தை தானம் செய்கிறார். ஜெயம் ரவி தானம் செய்த விந்தின் மூலமாக நித்யா மேனன் கர்ப்பம் அடைகிறாள். தன் குழந்தையின் தந்தை, ஜெயம் ரவி தான் என்று தெரியாமலேயே இருவரும் பழகுகின்றனர். இதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் 'காதலிக்க நேரமில்லை’ படத்தின் கதை.
தோல்வியைத் தழுவியது: காதலிக்க நேரமில்லை படத்தின் கான்செப்ட் புதுமையானதாக இருந்தது, திருமணம் செய்து கொள்ளாமலே, சிங்கிளாக இருந்தாலும், ஒரு குழந்தையை பெற்றோடுத்து வளர்க்கலாம் என்பதை படத்தின் இயக்குநர் கார்த்திகா உதயநிதி மிகவும் அழகாக சொல்லி இருந்தார். படத்தின் கதையே புதியதாக இருந்தது என்று படம் பார்த்தவர்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இன்றைய இளைய தலைமுறையினரை கவரும் வகையில் இருந்த இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் 3 கோடியை வசூலித்தது. வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் வசூல் 10 கோடியை தாண்டாமல் பெரும் தோல்வியைத் தழுவியது.
:
ஓடிடி ரிலீஸ் தேதி: இந்நிலையில் காதலிக்க நேரமில்லை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதிகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 11ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு அவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் தோல்வித் திரைப்படமாக உள்ளன. தற்போது ஜெயம் ரவி ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











