மணிரத்னம் - விஜய் சேதுபதி இணையும் படம்.. ஷூட்டிங் தொடங்கவில்லை.. அதற்குள் ஓடிடி இவ்வளவு வியாபாரமா?

சென்னை: தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஃபேமஸான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இடையில் வில்லன் ரோல் மட்டும் செய்துகொண்டிருந்த அவர்; தனது ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் அவர் ஹீரோவாக நடித்திருக்கும் ட்ரெய்ன் திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதை முடித்துவிட்டு மணிரத்னத்தின் இயக்கத்திலும் அவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக சினிமாவில் அறிமுகமாகி; பிறகு ஹீரோவானவர் விஜய் சேதுபதி. தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக மாறிய அவர்; திடீரென வில்லன் ரோல் செய்ய தொடங்கி; அதிலேயே ட்ராவல் ஆக தொடங்கினார். ஆனால் இதை பார்த்த ரசிர்களோ, விட்டால் வில்லனாகவே ரிட்டையர்டு ஆகிடுவாரோ என பயந்து மீண்டும் ஹீரோவாக நடிக்க வேண்டுகோள் வைத்தார்கள்.

Vijay Sethupathi-Mani Ratnam Film Bags 20 Crore Netflix Deal Before Shooting Begins
Photo Credit:

மீண்டும் ஹீரோவான சேது: அதனை ஏற்று நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் தனது 50ஆவது படமாக மகாராஜா படத்தில் கதாநாயகனாக ரீ என்ட்ரி கொடுத்தார். படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலும் படம் சக்கைப்போடு போட்டது. அடுத்து நடித்த ஏஸ் உள்ளிட்ட படங்கள் வரவேற்பை பெறவில்லை.

Also Read
Exclusive - லிங்கம் வெப் சீரிஸ் உருவானது எப்படி?.. இயக்குநர் லட்சுமி சரவணக்குமார் பிரத்யேக பேட்டி
Exclusive - லிங்கம் வெப் சீரிஸ் உருவானது எப்படி?.. இயக்குநர் லட்சுமி சரவணக்குமார் பிரத்யேக பேட்டி

மிஷ்கினின் ட்ரெய்ன்: தொடர்ந்து முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸிலும் நடித்தார். அது சுமாரான வரவேற்பையே பெற்றது. அடுத்ததாக அவர் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ட்ரெய்ன் படம் வரவிருக்கிறது. கலைப்புலி எஸ். தாணு இப்படத்தை தயாரித்திருக்கிறார். முதன்முறையாக மிஷ்கினுடன் சேது இணைந்திருப்பதால் பெரிய எதிர்பார்ப்பை படம் சம்பாதித்திருக்கிறது.

அரசன் படத்தில்: அவர் மீண்டும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டாலும்; தனக்கு முக்கியத்துவம் இருந்தால் மற்ற ரோல்களையும் செய்துவருகிறார். அந்தவகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் அரசன் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். இந்தப் படம் தவிர்த்து ஜெயிலர் 2 படத்திலும் அவர் கமிட்டாகியிருக்கிறார். இவை தவிர்த்து ஏகப்பட்ட படங்களை கையில் வைத்திருக்கிறார்.

மணிரத்னத்துடன் படம்: அதில் ஒரு படம்தான் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவிருப்பது. இதில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறாராம். ஏற்கனவே மணி இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார். அது போதிய ரெஸ்பான்ஸை பெறவில்லை. இந்தப் படத்தை மணிரத்னம் தனது அக்மார்க் ஸ்டைலில் இயக்கப்போவதாகவும் தெரிகிறது.

ஓடிடி விலை: சாய் பல்லவியும் அதில் இணைந்திருப்பதால் பெர்ஃபார்மன்ஸுக்கு படத்தில் எந்த குறைச்சலும் இருக்காது என்று நம்பலாம். இந்நிலையில் அந்தப் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, இன்னும் அந்தப் படத்தின் ஷூட்டிங்கே தொடங்கவில்லை. ஆனால் அதற்கு அப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் மொத்தம் 20 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறதாம். அதுமட்டுமின்றி வெளிநாட்டு உரிமம் 8 கோடி ரூபாய்க்கும், ஆடியோ ரைட்ஸ் 15 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியிருப்பதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X