The Odyssey Blue Sattai Maran Review - தி ஒடிசி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. பாகவதர் படம் மாதிரியாம்

சென்னை: கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஒடிசி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ஐமேக்ஸ் கேமராவில் படம்பிடிக்கப்பட்ட முதல் படம் இது என்பதால் தொழில்நுட்பத்தில் மிரட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது இந்திய ரசிகர்களுக்கு முழுவதும் கனெக்ட் ஆகவில்லை. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தன் விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார்.

உலக அளவில் புகழடைந்த இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இதுவரை அவர் இயக்கிய படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜானரில் உருவாகியிருப்பது ஆகும். இப்போது புராண கால கதையை கையில் எடுத்திருக்கிறார். நேற்று உலகம் முழுவதும் இந்தப் படம் ரிலீஸானது. பெரிய எதிர்பார்ப்போடு இந்தியாவிலும் வெளியான அப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன் விமர்சனத்தை ஷேர் செய்திருக்கிறார்.

Blue Sattai Maran Reviews The Odyssey   A Slow Drama That Fails to Impress
Photo Credit:

தி ஒடிசி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: அவர் தன் யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "போருக்காக ட்ராய் நாட்டுக்கு செல்லும் வீரன் 20 வருடங்களாக திரும்பவில்லை. அவர் இறந்துவிட்டார் என்று இங்கே இருக்கும் ராணியிடம் சொல்கிறார்கள். ஆனால் ராணி நம்பிக்கையுடன் இருக்கிறார். ஒடிசி மன்னர் நாட்டுக்கு திரும்பினாரா இல்லையா என்பதுதான் கதை. இது ட்ராய் படத்தின் தொடர்ச்சி என எடுத்துக்கொள்ளலாம். அந்தப் படம் போர் தொடர்பாக இருக்கும். இது போருக்கு பிறகு ஒடிசி எப்படி சொந்த நாட்டுக்கு வந்தார் என்பது படமாக இருக்கும்.

Also Read
Anbe Diana Blue Sattai Maran Review - அன்பே டயானா ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. நாம் பலியாவோம்
Anbe Diana Blue Sattai Maran Review - அன்பே டயானா ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. நாம் பலியாவோம்

எப்படி எடுத்தார்கள்: இதெல்லாம் ஒரு கதை என்று எப்படி எடுத்தார்கள் என தெரியவில்லை. படத்தில் ஹீரோ என்ன வீர தீர செயல்களை செய்தார் என்பது கதையாக இருந்தால் பரவாயில்லை. இதில், ஹீரோவோ நான் அடி வாங்காத ஊரே இல்லை என்று இருக்கிறார். ஒவ்வொரு ஊரிலும் அடி வாங்கி தப்பித்துவருகிறார். முதலில் ஒரு கண் உடையவரிடம் அடி வாங்குகிறார்.

Recommended For You
Blue Sattai Maran's Arulvaan Review - அருள்வான் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. ஒரே குழப்பமாம்
Blue Sattai Maran's Arulvaan Review - அருள்வான் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. ஒரே குழப்பமாம்

தாமரை மலர்ந்தால் மழுங்கும்: இன்னொரு ஊருக்கு சென்று பீச்சில் கடை போட்டிருக்கும் அக்காவிடமிருந்து தப்பிக்கிறார்கள். இன்னொரு ஊரில் 20 அடி உயரத்தில் இருக்கிறார்கள். அவர்களிடம் சென்று அடி வாங்குகிறார்கள். பிறகு எந்நேரமும் சென்று ஒரு பெண்ணுடன் பேசுகிறார். அந்தப் பெண் இந்த ஹீரோவுக்கு தாமரை இலையில் உணவு போட்டு மண்டையை மழுங்கடிக்கிறது. தாமரை எங்கே மலர்ந்தாலும் அங்கே மழுங்கிவிடும் என்பதுகூட தெரியவில்லை.

ஆம்னி பஸ்ஸில்கூட: இது கிறிஸ்டோபர் நோலனின் படமாச்சே. பயங்கரமான ஒரு போர் படத்தை கொடுக்கப்போகிறார் என்றுதான் நினைத்தோம். கேம் ஆஃப் த்ரோன்ஸ் மாதிரி இருக்கும் என எதிர்பார்த்தால்; விட்டாலச்சார்யா படம் மாதிரி இருக்கிறது. இந்தப் படத்தின் முழு எஃபெக்ட்டை அடைய மொத்தமே 40 தியேட்டர்கள்தான் இருப்பதாக சொல்கிறார்கள். ஆம்னி பஸ்ஸில் பார்த்தால்கூட அதே எஃபெக்ட்தான் கிடைக்கும்.

பாகவதர் படம் மாதிரி: இதையெல்லாம் நோலனுக்கு கம்பேக் என சொல்வார்கள். சவுண்ட் டிசைனிங் சூப்பர் என சொல்வார்கள். படம் நன்றாக இருக்கு நன்றாக இல்லை என்று ஒரே வார்த்தையில் சொல்லமாட்டார்கள். மிஸ் செய்யாமல் இதை ஐமேக்ஸில் பாருங்கள் என சொல்வார்கள். இது உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டான ட்ராமா அதைத்தான்ர் ரீமேக் செய்திருக்கிறார் என்று சொல்வார்கள். நம் ஊரிலும்தான் பாகவதர் படம் சூப்பராக ஓடியது. எனவே அதனை ரீமேக் செய்ய முடியுமா? அதை பார்ப்பேன் என்று சொல்பவர்கள் தாராளமாக சென்று பாருங்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X