Blue Sattai Maran's Arulvaan Review - அருள்வான் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. ஒரே குழப்பமாம்
சென்னை: கணேஷ் விநாயக் இயக்கத்தில் அருள்நிதி, ரம்யா பாண்டியன், ஆரவ் என பலர் நடித்திருக்கும் திரைப்படம் அருள்வான். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்தப் படத்தின் கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நேற்று வெளியான அந்தப் படம் ரசிகர்களிடம் ஓரளவுக்கு நல்ல விமர்சனத்தையே பெற்றது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தன் யூடியூப் சேனலில் விமர்சன வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
நடிகர் அருள்நிதி இப்போது அருள்வான் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அவரது படங்கள் என்றாலே கண்டிப்பாக அதில் வேல்யூ உள்ள கதை இருக்கும் என்ற நிலைமைதான் இருக்கிறது. இதிலும் அப்படித்தான். பெண் கல்வி, பழங்குடியின மக்களுக்கும் கல்வி, அவர்களது வாழ்வியல் உள்ளிட்ட விஷயங்களை உள்ளடக்கியிருக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ரம்யா பாண்டியன், ஆரவ் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். நேற்று வெளியான அருள்வான் ஓரளவுக்கு ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனலில் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், "இந்தப் படத்தின் கதையை பற்றி பார்த்தோம் என்றால்; ஒரு மலை கிராமம். அங்கே மக்கள் எல்லாம் அமைதியாக வாழ்கிறார்கள். அந்த ஊரில் சட்ட விரோத செயல்கள் செய்யும் ஒருவரும், வனத்துறை அதிகாரியும் சேர்ந்துகொண்டு ஊரிலிருந்து மக்களை காலி செய்ய வேண்டும் என வேலை செய்கிறார்கள்.
அதற்கு பிறகு என்ன ஆனது என்பதுதான் இதன் கதை என சொன்னால், வந்த கதையை எடுக்கலாம்; வந்து நொந்த கதையை எடுக்கலாமா என்று சொல்வார்கள் என்பதால் இது கதை கிடையாது; இன்னொரு கதை இருக்கிறது அதுதான் மெயின் கதை என ஒன்று வைத்திருக்கிறார்கள்.
அதற்காக எடுத்தார்கள்: அப்போ இதற்கு முன் சொன்ன கதை என்று கேட்டால்; இரண்டு ஃபுட்டேஜ் இருக்க வேண்டாமா? அதற்காக அது. சின்ன பெண் ஒருவர் படித்து பெரிய ஆள் ஆக வேண்டும் என ஆசைப்படுகிறார்; எனவே அந்த மாவட்ட கலெக்டரை சந்திக்கிறது சின்ன பெண். அதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. நல்ல கதை இருக்கிறது என்பதற்காக உருவாக்கப்பட்ட படம் இல்லை இது. கால்ஷீட் கிடைத்துவிட்டது என்பதற்காக எடுக்கப்பட்ட படம்.
பெரிய குழப்பம்: படம் எடுத்துக்கொண்டு இருக்கும்போதே கதையை எழுதியிருப்பார்கள் போல. இந்தப் படத்தில் மலைவாழ் மக்கள் ஒரு மொழி பேசுகிறார்கள். அந்த மொழி பேசுவது ஒருபக்கம் இருக்கட்டும். படம் பார்ப்பவர்கள் புரிதலுக்காக அவர்கள் தமிழிலேயே பேசுவார்கள் என சொல்வார்கள். படத்தில் வரும் கேரக்டர் எல்லாம் தமிழில் பேசும். ஆனால் அந்தப் பெண்ணோ ஸ்கூலில் சென்று அவர்கள் மொழியில் பேசிக்கொண்டிருக்கிறது. அந்த மொழியை தவிர்த்து வேறு எதுவும் தெரியாது என சொல்கிறது. இதுவே படத்தை குழப்பிவிட்டது.
காந்தாரா இசை, கதை: படத்துக்குள் காந்தாரா திரைப்படத்தின் கதை, இசையெல்லாம் வந்துவிட்டது. ஒரே குழப்பம். திடீரென கருமுட்டையை காணும் என சொல்கிறார்கள். இந்தக் கதைக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. எதையோ சொல்லி குழப்பி வைத்திருக்கிறார்கள். கடைசியாக பார்த்தால் பெண் கல்வி என்று சொல்லி ஈயம் பூசுகிறார்கள். விமர்சனம் பார்ப்பதற்கே உங்களுக்கு குழப்பமாக இருக்கிறதே; படம் பார்த்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications

