The Odyssey X Review - தி ஒடிசி எக்ஸ் விமர்சனம்.. கிறிஸ்டோபர் நோலன் சினிமா எப்படி இருக்கு?
சென்னை: உலக அளவில் புகழ் பெற்ற இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். அவரது இயக்கத்தில் இப்போது 'தி ஒடிசி' திரைப்படம் வெளியாகியிருக்கிறது. உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளை பெற்றிருக்கிறது இப்படம். இந்நிலையில் இன்று இந்தியாவில் படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். அதுகுறித்து இதில் பார்க்கலாம்.
'மெமண்ட்டோ', 'பேட்மேன் பிகின்ஸ்', 'தி டார்க் நைட்', 'இன்செப்ஷன்', 'இண்ட்டர்ஸ்டெல்லர்', 'டெனட்', 'ஓப்பன்ஹெய்மர்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கிறிஸ்டோபர் நோலன். அவர் இயக்கும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்ப்டுத்தும். அவரால் விண்வெளிக்கும் நம்மை அழைத்து செல்ல முடியும், அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட காலத்துக்கும் நம்மை அழைத்து செல்ல முடியும்.

நோலனின் இப்போதைய படம்: அந்த அளவுக்கு அவர் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் காட்சியிலும் அவ்வளவு உழைப்பை கொட்டுவார். இப்போது அவர் தி ஒடிசி படத்தை இயக்கியிருக்கிறார். ஹோமரின் 'ஒடிசி' புராண கதையை மையமாக வைத்துதான் இப்படத்தை அவர் இயக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதை அது. போருக்கு பிறகு ஒரு வீரன் நாடு திரும்புதலை மையமாக கொண்ட கதையாகும்.
இதுதான் முதல் திரைப்படம்: புராண காலத்துக்கு நோலன் சென்றிருப்பதால் இதிலும் தன்னுடைய முழு உழைப்பையும் கொட்டியிருக்கிறார். அந்தவகையில் ஐமேக்ஸ் கேமராக்களில் முழுவதும் படம் பிடிக்கப்பட்ட முதல் திரைப்படம் இது என்ற சிறப்பை பெற்றிருக்கிறது. மேலும், பல காட்சிகளுக்காக ரியல் லொக்கேஷன்களையே நோலன் பயன்படுத்தியிருக்கிறாராம். ஆபத்தான கடல் பகுதிகளிலும் ஷூட் செய்யப்பட்டிருக்கிறது.
ஒடிசி எக்ஸ் விமர்சனம்: இப்படி பல ரிஸ்க்குகளை செய்து இந்தப் படத்தை ஷூட் செய்து முடித்திருக்கிறார். இன்று உலகம் முழுவதும் படம் ரிலீஸாகியிருக்கிறது. இந்தியாவிலும் ரசிகர்கள் ஆர்வத்துடன் சென்று பார்த்தார்கள். இந்நிலையில் படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்கள். படம் பார்த்த ரசிகர் ஒருவர், "தி ஒடிசி. நூற்றுக்கு 60 மதிப்பெண் கொடுக்கலாம். செம பீக் தியேட்டர் அனுபவம். ஆரம்பத்தில் மெதுவாக போகும். ஆனால் கடைசி 45 நிமிடங்கள் வேற லெவல். ஸ்க்ரீனை விட்டு கண்ணையே எடுக்க முடியாது.
ஒரு வேண்டுகோள்: ஒரே ஒரு வேண்டுகோள். இந்தப் படத்தை எவ்வளவு பெரிய ஸ்க்ரீனில் பார்க்க முடியுமோ அவ்வளவு பெரிய ஸ்க்ரீனில் போய் பாருங்கள். ஐமேக்ஸில் பார்த்தும் இன்னும் அடுத்த லெவல். இது மாதிரியான லைஃப்டைம் தியேட்டர் அனுபவம் கொடுக்கக்கூடிய பாடம் அரிது. ஓடிடிக்காக வெயிட் செய்யாமல் தியேட்டரில் சென்று பாருங்கள்" என குறிப்பிட்டிருக்கிறார்.
பொறுமை அவசியம்: இன்னொரு ரசிகர், "தி ஒடிசி. மனதை பறிகொடுக்க வைக்கும் திரை அனுபவம். ஆனால் கொஞ்சம் பொறுமை அவசியம். ஐமேக்ஸில் பாருங்கள். முழுமையான அனுபவத்தை உணர அதுவே பெரிய வித்தியாசத்தை நமக்கு ஏற்படுத்தும்" என அறிவுறுத்தியிருக்கிறார்.ரசிகை ஒருவர், "சமீப காலத்தில் வெளியான மிகச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. பல தசாப்தங்கள் கடந்தும் இப்படம் நிலைத்து நிற்கும். புராணம், மாயாஜாலம் உள்ளிட்டவைகளை எல்லாம் விலக்கி வைத்துவிட்டு மனிதனின் உண்மையான விஷயங்களை ஆழமாக வெளிப்படுத்தியிருக்கிறார்" என புகழ்ந்திருக்கிறார்.
தவறவிடவே கூடாது: இந்த ரசிகர் தன் எக்ஸ் பக்கத்தில், "தி ஒடிசி. பிரமாண்டமான காட்சி விருந்து. வெதுவான திரைக்கதையை கொண்டிருந்தாலும் ஆரம்பம் முதல் இறுதிவரை ஈர்க்கிறது. மேட் டேமன் தனது நடிப்பால முழு படத்தையும் தாங்குஇறார். சில இடங்களில் படம் நீளமாக தோன்றினாலும், ஐமேக்ஸில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். மொத்தத்தில் மிஸ் செய்யக்கூடாத சிறந்த திரை அனுபவம்" என புகழ்ந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications
