Cocktail 2 X Review - ராஷ்மிகா மந்தனாவின் காக்டெயில் 2 எக்ஸ் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா?

மும்பை: ஷாஹித் கபூர், கீர்த்தி சனோன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் காக்டெயில் 2. லுவ் ரஞ்சன், தருண் ஜெயின் எழுதியிருக்கும் கதையை ஹோமி அடஜானியா இயக்கியிருக்கிறார். ஏற்கனவே வெளியான இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட்டடித்ததால்; இந்தப் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. இந்நிலையில் இன்று ரிலீஸான படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் வைத்திருக்கிறார்கள்.

பாலிவுட்டில் குறிப்பிடத்தக்க ஹீரோக்களில் ஒருவர் ஷாஹித் கபூர். அவர் ஹீரோவாக நடிக்க கீர்த்தி சனோன், ராஷ்மிகா மந்தனா ஹீரோயின்களாக நடித்திருக்கும் திரைப்படம் காக்டெயில் 2. இதன் முதல் பாகட்த்தில் சைஃப் அலிகான், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்திர்நுதார். அது கடந்த 2012ஆம் ஆண்டு ரிலீஸானது. தற்போது அதன் இரண்டாவது பாகம் 14 வருடங்கள் கழித்து ரிலீஸாவதால் பெரிய எதிர்பார்ப்பு படத்துக்கு இருந்தது.

Cocktail 2 X Review - Mixed Reactions For Rashmika Mandanna  Shahid Kapoor Film
Photo Credit:

திருமணத்துக்கு பின்: அதுமட்டுமின்றி ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணத்துக்கு பிறகு ராஷ்மிகா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் என்பதாலும் நேஷனல் க்ரஷ் ரசிகர்களிடையேயும் படத்துக்கு ஹைப் இருக்கவே செய்தது. இந்நிலையில் இன்று ரிலீஸான காக்டெயில் 2 பற்றி ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்கள்.

Also Read
முதலமைச்சரான விஜய்.. சட்டப்பேரவைக்குள் அட்லீ.. முன்னாள் அமைச்சர் இப்படி இழுத்து விட்டுட்டாரே
முதலமைச்சரான விஜய்.. சட்டப்பேரவைக்குள் அட்லீ.. முன்னாள் அமைச்சர் இப்படி இழுத்து விட்டுட்டாரே

காக்டெயில் 2 எக்ஸ் விமர்சனம்: படம் பார்த்த ஒரு ரசிகர், "காக்டெயில் 2 சிறப்பாக எழுதப்பட்டு நேர்த்தியாக இயக்கப்பட்ட ரொமான்ட்டிக் காமெடி படமாக ஈர்க்கிறது. முதல் பாதி நகைச்சுவை, வெளிநாட்டு லொக்கேஷன்கள், பாடல்களால் ரசிக்க வைக்கிறது. இரண்டாவது பாதி உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் பல எமோஷனல் தருணங்களை கொடுக்கிறது. படத்தின் க்ளைமேக்ஸ் மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

நட்சத்திரங்கள் சூப்பர்: ஷாஹித கபூர் தன்னம்பிக்கையான, சிறப்பான நடிப்பால் படத்தை முழுமையாக தாங்குகிறார்.கீர்த்தி சனோனும், ராஷ்மிகா மந்தனாவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மொத்தத்தில் காக்டெயில் 2 ரசிகர்கள் விரும்பிய படமாக அமைந்திருக்கிறது. பாக்ஸ் ஆஃபிஸிலும் இந்தப் படம் வெற்றி பெறும்" என குறிப்பிட்டிருக்கிறார்.

உயிரோட்டமே இல்லை: அந்த ரசிகர் படத்தை புகழ்ந்திருக்கிறார். ஆனால் இந்த ரசிகரோ,'காக்டெயில் 2 உயிரோட்டமே இல்லாத ஒரு படத்துக்கு உதாரணமாக அமைந்திருக்கிறது. நவீன கால காதல் உறவுகளை வைத்து விறுவிறுப்பாக படம் செல்லும் என்று பார்த்தால் அதில் ஏமாற்றமே கிடைத்தது. திரைக்கதை பலவீனம். வசனங்கள் எல்லாம் செயற்கை. ஷாஹித் கபூர் ஸ்டைலாகவும், கவர்ச்சியாகவும் தோன்ற முயற்சிக்கிறர். ஆனால் 45 வயதிலும் இளமையாக தோன்ற முயற்சி செய்வது அப்பட்டமாக தெரிகிறது. ராஷ்மிகா இந்த கதாபாத்திரத்துக்கு சரியான தேர்வு இல்லை. கீர்த்தி சனோன் அழகாக தோன்றினாலும் நடிப்பில் புதுமை இல்லை' என கிழித்திருக்கிறார்.

இவரும் அப்படித்தான்: இந்த ரசிகரும் தன் எக்ஸ் பக்கத்தில், "படம் பார்க்க தொடங்கிய 20 நிமிடங்களிலேயே இது மோசமான படம் என்று புரிந்துவிட்டது. 45 வயதான ஷாஹித் கபூர் 20 வயது இளைஞரை போல் நடிக்க முயற்சிக்கிறார். ராஷ்மிகா மந்தனாவோ தெலுங்கு பாணியில் ஹிந்தியை பேச முயற்சிப்பது செயற்கையாக தெரிகிறது. இந்தக் கதை நம்பும்படியாக இல்லை. காக்டெயில் 2 ஏமாற்றமளிக்கும் படமாக இருக்கிறது" என குறிப்பிட்டிருக்கிறார். இப்படி படத்துக்கு கலவையான விமர்சனங்களே வந்திருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X